அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது – மத்திய அரசு அறிவிப்பு!

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது – மத்திய அரசு அறிவிப்பு!

பிக் பி என்று செல்லமாக பலராலும் அழைக்கப்படும் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் விடுத்துள்ள அறிக்கையில் திரைத்துறையில் ஆற்றிய சிறந்த பணிகளுக்கான நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் ஆல்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வாழ்நாள் சாதனை யாளருக்கான இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் பிறந்த பால்கே, இந்திய சினிமாவின் முதல் திரைப்படமான அரிசந்திராவை 1913ல் உருவாக்கினார். இதைத்தொடர்ந்து 19 ஆண்டுகளில் அவர் 95 திரைப் படங்களையும், 27 குறும்படங்களையும் எடுத்தார்.

இந்திய சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் அவரது நினைவாக ஆண்டு தோறும் திரைக் கலைஞர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளருக் காக இந்த விருது தங்க தாமரை தாங்கிய பதக்கத்தையும், சால்வையையும், 10 லட்ச ரூபாயையும் உள்ளடக்கியது ஆகும். இதுவரை பழம் பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், உள்ளிட் டோர் இந்த விருதை பெற்றுள்ளார். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன்(1996) , இயக்குனர் பாலச்சந்தர்(2010) ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

தாதா சாகேப் விருதுக்கு அமிதாப் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு பாலிவுட் பிரபலங்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!