கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு -சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு .

கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு  -சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு .

ந்தியாவில் 1960கள் வரை, இந்தியாவில் கருக்கலைப்பு சட்டவிரோதமானது. கருக்கலைப்பு செய்தால் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 312 இன் கீழ் அந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்பட்ட சூழ்நிலையில் கருக்கலைப்பு செய்து கொள்வது குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள எல்லா பெண்களுக்கும் உரிமை உண்டு என்று இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த வருடம் இந்திய கருக்கலைப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தின்படி பல்வேறு பெண்கள் 20 – 24 வாரங்களில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள், மன நலம் பாதிக்கப்பட்ட பெண்கள், தீவிர குறை கொண்ட கருவை சுமக்கும் பெண்கள், கர்ப்ப காலத்தில் தனது திருமண உறவில் மாற்றம் கண்ட பெண்கள் ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவர்.

ஆனாலும் யாருக்கு எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரசூட் விரிவான தீர்ப்பு அளித்துள்ளார். அதன்படி, சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக, அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்ய தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

அதாவது திருமணமான, ஆகாத அனைத்து பெண்களும் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு என்றும் திருமணமாகி கைவிடப்பட்ட & திருமணமாகாத பெண்கள் 24 வாரம் வரையிலான கருவை கலைக்கலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. சென்ற ஆண்டில் கருக்கலைப்பு குறித்து கேரள ஐகோர்ட்டும் பெண்களுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!