ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கும் வாய்ஸ் கால் இலவசம்!

ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கும் வாய்ஸ் கால் இலவசம்!

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள பிற நெட்வொர்க் குகளுக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து குரல் அழைப்புகளும் ஜனவரி 1, 2021 முதல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஐயூசி எனப்படும் வேறு நெட்வொர்க்கு களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான கட்டணங்கள் இன்றோடு முடிவுக்கு வருவதால் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள பிற நெட்வொர்க்குகளுக்கு செய்யும் அனைத்து குரல் அழைப்புகளும் ஜனவரி 1 முதல் இலவசமாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறது .தற்போது ஜியோ நிறுவனம் பிற நெட்வொர்க்குகளின் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கிறது . மேலும் ஜியோ ஏற்கனவே தனது ஜியோ விலிருந்து ஜியோவிற்கு செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை .

‘ஜியோ அனைத்து இந்தியர்களையும் VoLTE போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயனாளியாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது. மேலும் நாங்கள் ஒவ்வொரு பயனர் மீதும் அக்கறை செலுத்துகிறோம். இதனால் தற்போது எங்கள் பயனர்கள் அனைவரும் ஜியோவுடன் இலவச குரல் அழைப்புகளை அனுபவிக்கிறார்கள். ஐ.யூ.சி கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டவுடன், ஆஃப்-நெட் உள்நாட்டு குரல் அழைப்பு கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றுவோம் என்ற உறுதிப்பாட்டை மதித்து இந்த சலுகையை வழங்குகிறோம்.,

அத்துடன் ஜியோ மீண்டும் 2021 ஜனவரி 1 முதல் அனைத்து ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்களுக்கான உள்நாட்டு குரல் அழைப்புகளையும் இலவசமாக வழங்கும். மற்றபடி ஆன்-நெட் உள்நாட்டு குரல் அழைப்புகள் ஜியோ நெட்வொர்க்கில் எப்போதும் இலவசமாக இருக்கும்’ என்று ரிலையன்ஸ் ஜியோ தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.

Related Posts

error: Content is protected !!