அஜித் குமார் ரேசிங் – மறக்க முடியாத முதல் சீசன்!

அஜித் குமார் ரேசிங் – மறக்க முடியாத முதல் சீசன்!

கோலிவுட்டின் எவர் ஸ்டார் அஜித் குமார் ரேசிங் குழுவுக்கு 2025 ஆம் ஆண்டின் ரேசிங் சீசன் வெறும் போட்டியல்ல, அது ஒரு கற்றல் பயணமாகும். ஒவ்வொரு சுற்றிலும் சவால்கள், தோல்விகள், வெற்றிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு புதிய இந்திய அணியின் ஆற்றலை உலக ரேசிங் மேடையில் வெளிப்படுத்திய ஆண்டு இது.

பயிற்சியிலிருந்து பேரறிவுக்குப் பயணம்

துபாயின் வெப்பமான பாலைவனத்திலிருந்து வட ஐரோப்பாவின் பனி மூட்டம் சூழ்ந்த காலை வரை ஒவ்வொரு ரேஸும் இந்த அணியை புதிதாக வடிவமைத்தது. 2024 அக்டோபரில் பார்சிலோனாவில் நடைபெற்ற Porsche Cup சோதனைகளுடன் தொடங்கிய இந்தப் பயணம், சரியாக பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு அதே சுற்றுப்பாதையில் நிறைவடைந்தது. ஆர்வம் மற்றும் அடக்க மனப்பாங்கு இணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்த சீசன் இது.

புதிய அணி என்ற வகையில் Ajith Kumar Racing பல சவால்களை எதிர்கொண்டது. சக்திவாய்ந்ததும் சிக்கலானதுமான Porsche 992 GT3 Cup காரை ஓட்டுவது வெறும் வேகத்தால் மட்டுமல்ல, அதற்கேற்ப மரியாதை, துல்லியம், அனுபவம் ஆகியவற்றையும் தேவைப்படுத்தியது. முகெல்லோ, ஸ்பா, பால் ரிக்கார்ட், மிசானோ போன்ற ஒவ்வொரு சர்வதேச சுற்றுப்பாதையும் குழுவுக்கே ஒரு புதிய பாடமாக அமைந்தது.

போட்டிகள் மற்றும் சாதனைகள்

அஜித் குமார் ரேசிங் அணி 2025 ஆம் ஆண்டில் பின்வரும் முக்கிய சாம்பியன்ஷிப்களில் பங்கேற்றது:

  • 24H Middle East Trophy – Porsche Cup 
  • 24H European Series – Porsche Cup: மொத்த புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் 
  • Porsche Sprint Challenge Southern Europe – Porsche Cup 
  • GT4 European Series 

🏁 முக்கிய முடிவுகள்: 

  • துபாய் (ஜனவரி 2025) – மூன்றாம் இடம் 
  • முகெல்லோ (மார்ச் 2025) – மூன்றாம் இடம் 

ஸ்பா-ப்ராங்கோர்சாம்ப் (ஏப்ரல் 2025) போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. போர்டிமாவ், எஸ்டோரில், வாலென்சியா, பார்சிலோனா, மிசானோ, பால் ரிக்கார்ட் போன்ற சுற்றுகளிலும் அணி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது.

இரண்டு கண்டங்களில் மொத்தம் 26 போட்டிகளில் பங்கேற்று , ஒரு இந்திய அணியாக இதுவரை இல்லாத அளவில் விரிவான சர்வதேச ரேசிங் அனுபவத்தைப் பெற்றுள்ளது அஜித் குமார் ரேசிங்.

ரேசிங்கின் மனிதப் பக்கம்

ஒவ்வொரு ரேஸ் நாளின் பின்னாலும் எண்ணற்ற மணி நேர உழைப்பு, பொறுமை, சோர்வற்ற மனநிலை இருந்தது. மெக்கானிக்குகள், இன்ஜினீயர்கள் இரவெங்கும் இயந்திரங்களை சரிசெய்தனர்; ஓட்டுனர்கள் மழை, குளிர், வெப்பம் அனைத்திலும் தங்களின் எல்லைகளைத் தாண்டினர். தோல்விகளும், தொழில்நுட்பக் கோளாறுகளும், தவறிய வாய்ப்புகளும் இருந்தன, ஆனால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு புதிய பாடமாக மாறியது. ஒவ்வொரு சுற்றும் – வெற்றி அல்லது தோல்வி – அணியின் வளர்ச்சிக்கும் அனுபவத்துக்கும் அடித்தளமாக அமைந்தது.

“இந்த ஆண்டில் நடந்த அனைத்தையும் சொல்வதற்கு ஒரு புத்தகம் போதும்; ஆனால் முக்கியமானது, ஒவ்வொரு சுற்றிலும் நாங்கள் வலுவாகி வந்தோம். இது தொடக்கம் மட்டுமே” என்று அஜித் குமார் மற்றும் Ajith Kumar Racing அணி தெரிவித்துள்ளது.

மைல்கற்களும் அடுத்த கட்ட நோக்கும்

இந்த முதல் சீசனில் பல சாதனைகள் உருவானது , அதில் சர்வதேச தொடர்ச்சியான ரேசிங் தொடர்களில் முழுமையாக பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற பெருமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்வதேச போடியம் வெற்றியும், உலக தரத்திலான திட்டமிடல் மற்றும் குழு ஒருங்கிணைப்பு அனுபவமும் கிடைத்தது.

இந்த முதல் சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் குமார் ரேசிங் அணி இப்போது வெற்றி பெற்ற அணியாக மட்டுமல்ல, அனுபவத்தால் செழித்த அணியாகவும் திகழ்கிறது. Porsche Cup மற்றும் GT4 போட்டிகளில் பெற்ற அனுபவம், எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. அணி தற்போது தொடர்ந்து சோதனைகள், புதிய திட்டமிடல், மற்றும் சர்வதேச ரேசிங் துறையில் தன் தடத்தை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்துகிறது.

“இந்த பயணம் எங்களின் கடின உழைப்பும் தாழ்மையும் சேர்ந்த விளைவு. இதுவரை கற்றதையெல்லாம் அடுத்த கட்டப் பயணத்தில் இன்னும் சிறப்பாக பயன்படுத்துவோம்,” என்று அஜித் குமார் மற்றும் Ajith Kumar Racing அணி உறுதி அளித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!