புது போர் ஒன்று உதயம் : அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை!

புது போர் ஒன்று உதயம் : அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை!

ராணுவத்தை வைத்து போர், சைபர் வார் என பல போர்களை சில நாடுகள் முன்னெடுப்பது அவர் களின் அறியாமையை காட்டத்தான்……..இப்போது புது போர் ஒன்று உதயமாகிருக்கிறது அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை.

பாலகோட் தாக்குதலுக்கு பதிலடியாய் பாகிஸ்தான் வான்வெளிக்கு இந்தியா சென்று சில தீவிர வாதிகள் முகாமை அழித்த நாளில் இருந்து பாகிஸ்தான் 26 பிப்ரவரியில் இருந்து தன் நாட்டின் வான் எல்லையில் எந்த ஒரு விமானமும் பறக்க கூடாது, அப்படி பறக்க வேண்டுமெனில் சிறப்பு அனுமதி பெற வேண்டும் இல்லயெனில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என அறிவித்து 5 மாதம் கிட்ட தட்ட ஆகிவிட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் தன் எல்லை கொள்கையை நீட்டித்து கொண்டிருக்கிறதே தவிர வான் எல்லையை திறக்கவே இல்லை.

போன மாதம் சுஸ்மிதா ஸ்வராஜ் பிஸேக்க்கில் நடந்த அந்நிய நாட்டு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள 21 ஆம் தேதி மே அன்று பாகிஸ்தான் வான் வழி பறக்க இந்தியா கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க அனுமதி அளித்தது. நேற்று மோடி அதே பிஷேக்கில் நடக்கும் Shanghai Cooperation Organisation (SCO) summitல் கலந்து கொள்ள செல்வதால் பாகிஸ்தான் வான் வெளியை உபயோகபடுத்த அனுமதி கோரியதில் நேற்று இரவு அந்த் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்.

இந்த வான் வெளி மூடப்பட்டதால் பல விமானங்கள் பல ஆயிரம் கிலோமீட்டர்களை சுற்றிதான் செல்ல வேண்டியது இருக்கிறது. உதாரணத்திஏக்கு டெல்லி காபூல் செல்ல 2 மணி நேரம் கூட ஆகாத இன்டிகோ இப்போது சுத்தி சுத்தி கத்தார் வரை சென்று பெட்ரோல் நிரப்பி பின்பு தான் 5-6 மணி நேரத்திர்க்கு பின்பு காபூலை அடைய முடிகிறது. டெல்லி – அமெரிக்கா நேரடி விமானங்கள் 3-4 மணி நேரம் அதிகம் எடுத்து கொள்கிறது.

பல அந்நிய நாட்டு விமானங்களும் இந்த வழித்தடத்தை உபயோகிக்க முடியாமல் சுற்றி செல்லும் அவஸ்தை பெரும் கொடுமையாகும். பாலகோட் விஷயத்தில் இந்தியா விதித்த வான்வெளி கட்டுப்பாடுகளை மே 31 முற்றிலும் விலக்கிகொண்டது.

இந்த Shanghai Cooperation Organisation (SCO) summitல் இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை நேருக்கு நேர் சந்தித்தாலும் அவர்கள் எதுவும் இந்திய பாகிஸ்தான் பிரச்சினை களை பற்றீ பேசமாட்டார்கள் என்று அந்த் நாட்டின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கிறது என்பதும் அடிசினல் சோகம்.

Pakistan’s Airspace opened for PM MODI for the second time on a special permission after Sushmita Swaraj due to Balakot strike, Which Pakistan Air Space was closed on 26th Feb 2019 to all commercial airlines……and LONG enroute to many airlines……

Related Posts