அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். என்று அதிமுக-வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தர்விட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது. அதில் ‘தற்போதைய சூழலில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்தது. அந்த உத்தரவில் ,”சமாதானம் என்ற பேச்சுக்கு தற்போது இடமில்லை என கூறுகிறீர்கள். நாங்கள் கூறும் பரிந்துரையை ஏற்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இரு தரப்பும் கையெழுத்திடாமல் பொதுவான ஒருத்தரை, பொதுக்குழுவின் சார்பாக, அவைத் தலைவர் கையெழுத்திட்டால் என்ன?. வேட்பாளரை இறுதி செய்ய மட்டும், ஓ.பி.எஸ். உள்ளிட்ட மூவரும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும். பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படும் வேட்பாளரை, அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அந்த பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்க வேண்டும். அவைத் தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும். பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதிக்க முடிவு எடுக்க வேண்டும். எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

error: Content is protected !!