நிதித் தேவையா? பிஎஃப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக் கொள்ளலாமே!- வழிமுறை!!

கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவருமே வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின் றனர்.பலருக்கு அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை இருப்பதால், தேவைகளுக்கு என்ன செய்வதென்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

நிறுவனங்களில், அலுவலகங்களில் வேலை பார்ப்போர் சம்பளம் பிடித்தம், அல்லது ஊதியம் கிடைக்காத நிலை இருப்பதால், அவசர தேவைக்கு கடன் வாக்கும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர் .நிதித் தேவைகளுக்கு தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக் கொள்ள மத்திய அரசு கடந்த மாதம் அனுமதித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இது ஊரடங்கின் போது, ஏற்படும் நிதி சிக்கலுக்கு உதவும் என்பதால் மேற்சொன்ன அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

உங்களுக்கு பணத்தேவை இருக்கும்பட்சத்தில், அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த பணம் மூன்று முதல் 7 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் வந்துவிடும்.

எவ்வளவு பணம் கிடைக்கும்?

1. உங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75% தொகை அல்லது உங்கள் மொத்த ஊதியத்தில் மூன்று மாத அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி. இதில் எது குறைவோ அந்த பணம் கிடைக்கும்.

2. எடுத்துக்காட்டாக, உங்கள் அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி சேர்த்து ₹30000 என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பிஎஃப் கணக்கில் ₹3 லட்சம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

அ) 3 மாதம் அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி = ₹90,000 (₹30,000×3)
ஆ) 75 % பிஎஃப் பணம் = ₹2,25,000

இதில் நீங்கள் ₹90,000 பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.

எப்படி விண்ணப்பிப்பது ?

1. https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையப்பக்கத்திற்கு செல்லவும்

2. உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு உள்நுழையவும்

3. Online Services கீழ் உள்ள Claim என்பதை தேர்வு செய்யவும்

4. காண்பிக்கப்படும் திரையில், வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டு உறுதி செய்யவும்.

5. Proceed for Online Claim என்பதை கிளிக் செய்யவும்

6. பின்னர் திரையில் தோன்றும் தெரிவில், PF Advance என்பதை தேர்வு செய்யவும்

7. Purpose of Withdrawl என்பதற்கு Outbreak of Pandemic (Covid 19) என்பதை தேர்வு செய்யவும்

8. உங்களுக்கு தேவையான பணத்தை குறிப்பிட்டு, காசோலை (செக்) அல்லது வங்கி பாஸ் புக்கை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.

9. இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை குறிப்பிடவும்

10. உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும்.

உங்கள் விண்ணப்பம் சரிப்பார்க்கப்பட்டு, ஒருவாரத்தில் பணம் வங்கிக்கணக்கில் வந்து விடும்.

error: Content is protected !!