’ஓ மை கடவுளே’ படத்தில் நான் கிறிஸ்துவ பொண்ணாக்கும் – ரித்திகா சிங் ஹேப்பி!
படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது…
“ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கேரக்டர்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்க வாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை கவர்ந்த விஷயம், நாயகி ஒரு கிறிஸ்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது. படம் முழுக்க நீங்கள் புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள்.
2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து “ஓ மை கடவுளே” படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
அசோக்செல்வன் நாயகனாக நடிக்க ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ளார். வாணி போஜன், M S பாஸ்கர், சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து
இசை – லியான் ஜேம்ஸ்
ஒளிப்பதிவு – விது அயன்னா
படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்
கலை இயக்கம் – இராமலிங்கம்
உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்
உடைகள் – முகம்மது சுபையர்
சண்டைப் பயிற்சி – ராம்குமார்
பாடல்கள் – கோ சேஷா
புகைப்படம் – ராஜா
தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்
நிர்வாக தயாரிப்பு – நோவா.