விவசாயம் கத்துக்கலையோ.. விவசாயம்! – கார்த்தி அழைக்கிறார்!
கடந்த சில நாட்களில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று ரசிகர்களால் அழைக்ககூடிய நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.இதையடுத்து கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள வேணுகோபால் என்பவரின் விளைநிலங்களுக்கு சென்று விவசாயம் குறித்து பல விஷயங்களை.அறிந்துள்ளாராம்.
தற்போது நடிகர் கார்த்தி அந்த புதுமையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ”விவசாயத்தோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்து வந்த நம் முந்தைய தலைமுறையினர் பற்றி என் அப்பா நிறைய சொல்லியிருக்கார்.. 50, 60ம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கிடைத்தாலும் போகவிட மாட்டார்களாம் .’சாமி சண்டைக்காரனாப் போனாலும், பூமி என்றுமே நம்மைக் கைவிடாது’ என்ற நம்பிக்கையில் வாழ்ந்தனர். ‘நம்ம வீட்டுல நாலு பேருக்கு வேலைக்கு இருக்கும்போது, நீ அரசாங்கத்துக்கு வேலை பார்க்கப் போறீயா? நம்ம வேலைய (விவசாயம்) பாருடா, நாலுகாசு சம்பாதிக்கலாம்,’ என்று வாழ்ந்த காலமெல்லாம் கேள்விப் பட்டேன்.
இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம்.அங்கே கிடைத்த இயற்கையான காற்று , அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண் முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக் கொள்ளவேண்டும்”என்றார்
மெக்கானிக்கல் இஞ்சினீயரான வேணுகோபால் இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வேளாண்மை தொழிலை பேரார்வத்துடனும் நம்பிக்கையோடும் தனது விளைநிலங்களில் விவசாயம் செய்துவருகிறார் இவரிடம் நடிகர் கார்த்தி வந்து போனது பற்றி கேட்ட போது, “நான் ஆனந்தவள்ளி பள்ளியில் விவசாயம் சார்ந்த பணிகளை குழந்தைகளுக்கு கற்று தருகிறேன். அப்பள்ளியின் தாளாளர் , நடிகர் கார்த்தியின் குடும்பம் வந்து உங்களிடம் விவசாயம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் விரும்புகின்றனர் என்று கூறினார்.மறுநாளே கார்த்தி குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு அவர்களை என் பண்ணைக்கு அழைத்தேன். மறு நாளே வந்த கார்த்தி சாரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மிகுந்த ஈடுபாடுடன் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்டார். அவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்தது எனக்கு பேரின்பமாக இருந்தது .அவரின் வேலைப்பளுவிற்கு இடையில் இங்கு வந்தது பாராட்ட வேண்டியவையாகும்”என்றவர்.” மேலும் ’பல மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக செயற்கை பொருட்களை பயன்படுத்தினால் ஆபத்து நமக்குதான் என்பதை உணர வேண்டும். எனவே செயற்கையானவற்றை தவிர்த்து இயற்கை தரும் பலன்களை பற்றி தெரிந்து கொண்டு அதன்படி வாழ முயற்சிசெய்வோம்.மேலும், செலவில்லா விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளவர்கள் இந்த இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் www.ilearnfarming.com’ என்றும் தெரிவித்தார்




