வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு!- விரைவில் அறிவிப்பு வெளியாகும்?

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு!- விரைவில் அறிவிப்பு வெளியாகும்?

நாடு முழுவதும் ஆதார் எண்ணை பல்வேறு திட்டங்களுடன் மத்திய அரசு இணைத்து வருகிறது. இனி மேல் எதற்கெடுத்தாலும் ஆதார் எண் கட்டாயமாகி விடும் நிலை உருவாகிவருகிறது. இந்த நிலையில்வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் கமிஷன் விரும்புகிறது. இதன்மூலம் தேர்தல் நடைமுறையில்வெளிப்படைத்தன்மையை கொண்டுவரலாம் என்று தேர்தல் கமிஷன் கணித்துள்ளது. இதற்கு சுப்ரீ்ம் கோர்ட் அனுமதி கோரி தேர்தல் கமிஷன் மனு தாக்கல் செய்துள்ளது. விரைவில் அது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நியாயமான, வெளிப்படையான தேர்தல் என்ற நீண்டகால நலனை கருத்தில் கொண்டு இதை சுப்ரீம் கோர்ட் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர். ஏற்கனவே ஆதாருடன் பான் கார்டு எண் இணைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் எண்ணை மத்தியமாநில அரசுகள் பயன்படுத்தி வருகின்றன. எனவே இதற்கும் அனுமதி கிடைக்கும் என்றும் தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

டெயில் பீஸ்:

ஆதார் எண் குறித்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் அரசியல் சாசன அமர்வு இறுதியாக முடிவெடுக்கும் என்று  சுப்ரீம் கோர்ட்  தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் மற்றும் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆகியோர் தலைமை நீதிபதியிடம் அரசியல் சாசன அமர்வை நியமிக்குமாறு கேட்டுக் கொள்வோம் என்று உறுதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts