ச்சிச்சீ.. ஃபாரீன் ஜாப் புளிக்குது!- இந்தியர்களின் மன நிலை குறித்த சர்வே ரிசலட்!

ச்சிச்சீ.. ஃபாரீன் ஜாப் புளிக்குது!- இந்தியர்களின் மன நிலை குறித்த சர்வே ரிசலட்!

திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்ற சொல் பலருக்கு இன்றும் பரிச்சயமானதாகவே இருக்கும். ஆம். நம் தேவைக்கு கடல் கடந்து போய் வருவாய் சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் அந்த வார்த்தை தர்போது வலுவிழந்து போய் வருகிறது. அதாவது வெளிநாடுகளில் நிலவும் மோசமான அரசியல் சூழல் காரணமாக வெளிநாட்டில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலகளாவிய வேலை தேடும் இணையதளமான இண்டீட் (Indeed) நடத்திய கணக்கெடுப்பில் வெளிநாட்டு வேலைகள் மீதான இந்தியர்களின் ஆர்வம் குறைந்து மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்ப நினைப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின் அறிக்கைப்படி அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கையில் 38 சதவீதம் மற்றும் பிரிட்டனில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் 42 சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இண்டீட் நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதேசமயம் ஜெர்மனியில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை 10 சதவீதம், அயர்லாந்தில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இது குறித்து பேசிய இண்டீட் நிறுவனத்தின் இந்திய கிளை நிர்வாக இயக்குனர் சசிகுமார் ‘‘வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம் மற்றும் வெளிநாடுகளில் நிலவும் அசாதரணமான அரசியல் சூழல் ஆகியவற்றால் திறமையான இந்தியர்கள் தாய்நாட்டிலேயே வேலை தேட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது பெரும் திருப்புமுனையின் துவக்கமாக அமைந்துள்ளது’’
‘‘மேலும் மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களால் இந்தியாவில் சுயதொழில் துவங்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தாய்நாட்டில் வேலை தேடும் ஆர்வம் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணம்’’ என சசிகுமார் கூறினார்.

இந்தியாவிற்கு திரும்ப நினைக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கணகெடுப்பில் தெரியவந்துள்ளது. மீண்டும் இந்தியா திரும்ப விரும்புபவர்களின் எண்ணிக்கை பிரிட்டனில் 25 சதவீதம், ஆசிய பசிபிக் பகுதிகளில் 170 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!