பாலியல் தொல்லை குறித்து இ-மெயில் மூலம் புகார் – சுப்ரீம் கோர்ட் தகவல்!

பாலியல் தொல்லை குறித்து இ-மெயில் மூலம் புகார் – சுப்ரீம் கோர்ட் தகவல்!

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்கள் சுப்ரீம் கோட்டுக்கு நேரடியாக இ-மெயில் அல்லது கடிதம் மூலமாக தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என்றும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து புகார் தெரிவிக்க விரும்பும் பெண்கள், இந்த குழுவுக்கு gupta.rachna@indianjudiciary.gov.in என்ற ‘இ-மெயில்’ முகவரிக்கும் மற்றும் பதிவு தபால், விரைவு தபால், கொரியர் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.என்றும் தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.
suprem court of india
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது.
இதற்கு முடிவு கட்டும் வகையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம், இது தொடர்பான புகார்களை பெற சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 6 பெண் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை சாராத 2 வெளி நபர்கள் கொண்ட குறை தீர்ப்பு குழு ஒன்றை சமீபத்தில் ஏற்படுத்தினார். அப்போது பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டி நெறிமுறைகளின்படி இந்த குழு செயல்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த குழுவுக்கான உறுப்பினர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்த குறை தீர்ப்பு மையம் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது.

எனவே, தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து புகார் தெரிவிக்க விரும்பும் பெண்கள், இந்த குழுவுக்கு gupta.rachna@indianjudiciary.gov.in என்ற ‘இ-மெயில்’ முகவரிக்கும் மற்றும் பதிவு தபால், விரைவு தபால், கொரியர் மூலமாகவும் புகார் அளிக்கலாம். நேரில் சென்று புகார் அளிக்க விரும்புபவர்கள் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள இந்த குழுவின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக ரகசியாகமாகவும், நியாயமான முறையிலும் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.

Women can e-mail, post complaints to Supreme Court sexual harassment cell
*******************************************************************************************
The committee set up in the Supreme Court to deal with instances of sexual harassment within its precincts has decided that aggrieved women can send their complaints to it by post or e-mail.

Related Posts