அதிக சாக்லேட்டும் அளவான சிவப்பு ஒயினும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமாக்கும்!
சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 3ல் ஒரு பங்கு குறைவதாக 8 ஆய்வுகளின் இறுதிகட்ட அறிக்கை தெரிவிக்கிறது. தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போதுஅதிக சாக்லேட் சாப்பிட்டாலும், சிவப்பு ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் வரும் வாய்புகள் குறைவு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வை மேற்கொண்டனர்.சுமார் 2 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் அளவாக சிவப்பு ஒயின் அருந்துபவர்களுக்கு 2 வது ரக நீரிழிவு தாக்குதல் குறைவாக இருந்தது. அவற்றில் உள்ள ஆந்தோ சியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது. அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது என தெரிய வந்துள்ளது.
ஆந்தோசியோனின்ஸ் மூலக்கூறுகள் காபி கொட்டைகள், சிவப்பு திராட்சை, ஒயின் மற்றும் சிவப்பு அல்லது நீல நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளது. அவற்றை சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் வருவதற்கு ஆனா வாய்புகள் குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், சாக்லேட் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், கடைகளில் விற்கப்படும் சாக்லேட்களில் 100 கிராமுக்கு 500 கலோரிகள் உள்ளன. அதை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடவும், டயபடீஸ் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
Red wine and chocolate could fight type 2 diabetes, research says
**********************************************************************************


