போலியோ இல்லா நாடு இந்தியா – உலக சுகாதார நிறுவனம அறிவிப்பு!
தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக போலியோ நோயற்ற நாடாக இந்தியா விளங்குவதால், இந்தியா போலியோ இல்லாத நாடு என்ற அறிவிப்பை உலக சுகாதார நிறுவனமான WHO ( World Health Organisation) இன்று அறிவிக்க உள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக போலியோ நோயாளிகளின் எண்ணிக்கையில் பாதி பேர் இந்தியர்களாக இருந்து வந்தனர்.
இதனையடுத்து ஆண்டுக்கு ரூ. 1000 கோடி செலவில், போலியோவை ஒழிக்க போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவின் பெயரை உலக சுகாதார நிறுவனம் நீக்கி உள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு மேற்குவங்கத்தில் ருக்சார் என்ற 2 வயது சிறுமிக்கு ஏற்பட்ட போலியோ பாதிப்பே கடைசியானது ஆகும். போலியோ இல்லாத நாடாக தற்போது மாறியிருந்தாலும், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இது முற்றிலும் ஒழிக்கப்படாததால் அந்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு போலியோ பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
India defeats polio, global eradication efforts advance
***************************************************************
India marks three years since its last reported polio case on Monday, meaning it will soon be certified as having defeated the ancient scourge in a huge advance for global eradication efforts.


