பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி மரணம்:

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி மரணம்:

சிவாஜியுடன் “முதல் தேதி”, “நான் சொல்லும் ரகசியம்” படங்களிலும், எம்.ஜி.ஆருடன் “சக்ரவர்த்தி திருமகள்”, “மன்னாதி மன்னன்” ஆகிய படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சலி தேவி கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பிரப்ல்மான இவர் . தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
jan 13 anjali-devi.mini
அஞ்சலிதேவியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம்.அவருக்கு 5 வயது ஆனபோது, குடும்பம் காக்கிநாடாவில், குடியேறியது. பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு நடைபெற்ற நாடகங்களில் பங்கு கொண்டார். காக்கிநாடாவில், இசை அமைப்பாளராகவும், நடன இயக்குனராகவும் இருந்த ஆதிநாராயணராவ் என்ற இளைஞர், நடன நாடகத்தைப் பார்த்தார். அஞ்சலிதேவியின் அழகும் நடனமும், அவரைக் கவர்ந்தன. தன் நாடகங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.

தமிழில் சிவாஜியுடன் “முதல் தேதி”, “நான் சொல்லும் ரகசியம்” படங்களிலும், எம்.ஜி.ஆருடன் “சக்ரவர்த்தி திருமகள்”, “மன்னாதி மன்னன்” ஆகிய படங்களிலும் நடித்தவர் ஜெமினி கணேசனுடன் இவர் நடித்த “காலம் மாறிப்போச்சு” சிறந்த படம் என்ற பெயருடன் வசூலையும் குவித்தது. மற்றும் “இல்லறமே நல்லறம்”, “பூலோக ரம்பை”, “வீரக்கனல்” முதலான படங்களில் ஜெமினிகணேசனுடன் நடித்தார். தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார்.தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது “லவகுசா”. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. ராமராவ் ராமராகவும், அஞ்சலிதேவி சீதையாகவும் அற்புதமாக நடித்தனர்.

பிற்காலத்தில், அண்ணி, அம்மா வேடங்களிலும் அஞ்சலிதேவி நடித்தார். ஸ்ரீதர் தயாரித்த “உரிமைக்குரல்” படத்தில், எம்.ஜி.ஆருக்கு அண்ணியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. “அன்னை ஓர் ஆலயம்” படத்தில், ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடித்தார்.தற்போது 86 வயதாகும் இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் இன்று காலமானார்.