சுங்கச்சாவடிகளை அடித்து தீ வைத்த சிவசேனா கட்சியினர்!

சுங்கச்சாவடிகளை அடித்து தீ வைத்த சிவசேனா கட்சியினர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டில் வாகன வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.இதனை அம்மாநிலத்தின் செல்வாக்கு மிக்க கட்சியான சிவசேனா கடுமையாக எதிர்த்து வருகிறது.அத்துடன் முழு அடைப்பு ஒன்றுகும் அழைப்பு விடுத்திருந்தது. சுங்கச்சாவடிகளில் நடைபெறும் கட்டண முறைகேட்டைக் கண்டித்தே இந்த முழு அமைப்பு நாளை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
jan 12 - tolgate
இந்நிலையில் கோல்காபூரில் உள்ள டோல்கேட் ஒன்றில் வாகனத்தில் வந்த சிவசேனா கட்சியினரிடம் டோல்கேட் ஊழியர்கள் வரி செலுத்துமாறு கூறினர்.இதில் ஏற்பட்ட தகராறில் சிவசேனா ஆதரவாளர்கள் டோல்கேட்டை அடித்து சேதப்படுத்தினர்.

மேலும் இந்த செய்தி பரவியதும், சிவசேனா கட்சியினர் கோல்காபூர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள டோல்கேட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பல டோல் கேட்டுக்கு தீ வைக்கப்பட்டது. ஊழியர்களுக்கு உருட்டுகட்டை அடிவிழுந்தது. அவ்வளவு களபேரங்கள் நடந்து வருவதை மகாராஷ்டிரா போலீசார் வேடிக்கை பார்த்து வந்ததாக புகார் எழுந்ததுள்ளது.

Shiv Sena activists smash 9 toll barriers in Kolhapur
**********************************************************
Four toll plaza booths were vandalised in Maharashtra’s Kolhapur on Sunday after a dispute over collection of toll tariff.