சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில்!

சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில்!

தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை எடுத்ததற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் சோனியா காந்திக்கு கோயில் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க, சோனியா காந்தியை வழிபட நினைப்பது, தெலங்கானா மாநிலத்திற்காக உயிர்த்தியாகம் செய்த ஏராளமான இளைஞர்களை அவமதிப்பது போன்றது என்று தெரிவித்துள்ளது.
jan 9 - soniya ammaan
விஜயவாடா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான சங்கர் ராவ் என்பவர், தமது நிலத்தில் இந்த கோயிலை கட்டி வருகிறார். இதற்காக தெலுங்குதாய் வடிவில் சோனியா காந்தியின் வெண்கல சிலை ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.

தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தபோதிலும், அதனை சோனியா காந்தியே நிறைவேற்றியிருப்பதாக சங்கர் ராவ் தெரிவித்துள்ளார்.இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சோனியா காந்தியை கடவுளாக கருதி வழிபடுவதாகவும் சங்கர் ராவ் கூறியுள்ளார். விஜயவாடாவில் உள்ள சோனியா காந்தி சிலையை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.