நில ஆர்ஜித புது சட்டம் – இன்று முதல் அமலாகிறது
வலுக்கட்டாயமாக நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்கவும், கையகப்படுத்தும் நிலங்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும் நில ஆர்ஜித சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் 1894ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதற்கான புதிய சட்ட மசோதா, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டது. இரு அவை களிலும் பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனாபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்தார்.இந்த நிலையில், நில ஆர்ஜித சட்ட மசோதா இன்று நாடு முழுவதிலும் அமலுக்கு வருகிறது.

அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்க தேவைப்படும் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய 1894ம் ஆண்டில் ஆங்கிலேயர் இயற்றிய சட்டமே இதுநாள் வரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த சட்டம் மூலம் நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெறாமல் அரசே ஒரு விலையை நிர்ணயித்து நிலத்தை ஆர்ஜிதம் செய்து வந்தது. இதனால் சம்மதமே இல்லாமல் அடிமாட்டு விலைக்கு நிலத்தை விற்று வந்தனர். இம்முறை நிலத்தை பறித்துக்கொள்ளும் செயல் என மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதிலும் மேற்கு வங்கம் சிங்கூர் பகுதி மக்கள் டாடா நிறுவனத்துக்கு நிலம் அளிக்க மாட்டோம் என நடத்திய போராட்டம் அங்கு ஆட்சி மாற்றத்துக்கே வழி வகுத்தது. இந்நிலையில் நில ஆர்ஜிதம் செய்வதற்கான வழிமுறைகளை புதிய சட்டமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இன்று முதல் அமலாகும் இந்த சட்டத்தின்படி, நிலம் கையகப் படுத்தியதால், நிலங்களை இழந்தவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படும். அரசு-தனியார் கூட்டு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களில் 70 சதவீதம் பேரின் ஒப்புதலை பெறுவது கட்டாயம் ஆகும். தனியார் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த 80 சதவீத நில உரிமையாளர்களின¢ ஒப்புதல் அவசியம் ஆகும்.
மேலும் இந்த சட்டத்தின்படி, நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை விசாரிக்க மாநில அரசுகள் 6 விதமான குழுக்களை அமைக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
New land acquisition law comes into force
*********************************************************
The new Land Acquisition Act, enacted by Parliament in September to provide just and fair compensation to those whose land is taken away for constructing roads, buildings or factories, will come into force from Wednesday, replacing 120-year-old legislation.


