புது யுகம் சேனலில் ஒளிப்பரப்பாகும் “கருப்பு வெள்ளை” யில் என்ன ஸ்பெஷல்?
எத்தனையோ சேனல்களுக்கு மத்தியில் தனி ஸ்டைலில் பயணிக்கும் புது யுகம் தொலைக் காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி “கருப்பு வெள்ளை” .
எஸ்.எம்.எஸ்… எம்.எம்.எஸ்… ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்று வளர்ந்து, தற்போது ‘வாட்ஸ்ஆப்…’ என்கிற பெயரில் நொடிகளில் புகைப்படங்களுடன் தகவல்கள் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் காலம் இது. இந்த மின்னல் வேக தொழில்நுட்ப வளர்ச்சியை குற்றங்களுக்கான ஆயுதமாக மாறிக்கொண்டு வருவதுதான் கொடுமை! உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, ஒரே ஒரு ‘வாட்ஸ்ஆப்’ செய்தி மூலமாக, ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்யும் வக்கிரங்கள் அதிகரித்துவிட்டன.
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இணையதள குற்றங்கள் தொடர்பாக சுமார் 10 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.ஆத்திரத்தில் தொடங்கி ஆதாயத்துக்காக வரை நடத்தப்படும் இதுபோன்ற குற்றங்களையும் அதன் பின்னணிகளில், நடக்கும் அராஜங்களையும் அலசுகிறது “கருப்பு வெள்ளை” .
இப்படியுமா நடக்கும் ? என்று உங்களை விக்கித்து நிற்க வைக்கும் கற்பனைக்கும் எட்டாத பல குற்றச் சம்பவங்களை உங்கள் கண் முன்னே நிறுத்துவதோடு, உளவியல் நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுணர்கள், வழக்கறிஞர்கள், மன நல மருத்துவர்கள், சமூகவியல் அறிஞர்களுடன் விவாதித்து உரிய படிப்பினையையும், விழிப்புணர்வையும் உங்களுக்கு அளிப்பதே கருப்பு வெள்ளை நிகழ்ச்சியின் தலையாய நோக்கம் ஆகும்.கருப்பு வெள்ளை நிகழ்சியை தொலைக்காட்சியில் பிரபல செய்தி வாசிப்பாளராக பணியற்றிய சௌதா மணி தொகுத்து வழங்குகிறார்.



