32°C
விளம்பரம்
Advertisement

பயங்கரவாத தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்பை விட சாலைபத்து அதிகம்!- சுப்ரீம் கோர்ட் வேதனை!

admin சேலம் Published: December 7, 2018 2 நிமிட வாசிப்பு Updated: December 8, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் சாலை விபத்துக்களில் 400க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்; ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 55 சாலை விபத்துகள் ஏற்பட்டு 17 பேர் இறந்துள்ளனர். சாலை விபத்துகளில் 84 சதவீதம் வாகன ஓட்டிகளால் நடந்துள்ளன. என்று முன்னரே செய்திகள் வெளி யான நிலையில் இந்தியா முழுவதும் சாலையில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 14,926 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை எல்லையில் உயிர் இழந்த ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என சுப்ரீம் கோர்ட் இன்று கடும் கண்டனம் தெரிவித்தது.

நாடு முழுவதும் பராமரிக்கப்படாத சாலைகளில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவது குறித்து கடந்த ஜூலை 20ம் தேதி சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்து  இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யும்படி சுப்ரீம் கோர்ட் சாலை பாதுகாப்பு கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.எஸ் ராதாகிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி இந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் தன் அறிக்கையை  சமர்பித்தது.

அந்த ஆய்வறிக்கை தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி லோகுர் தலைமையில் ஆன அமர்வு விசாரணை நடத்தியது. அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் ‘‘சாலையில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகளில் கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரை 14,972 பேர் கொல்லப் பட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்பை விட இது அதிகம். இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என தெரிவித்தனர்.

‘‘இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். சாலையில் உள்ள குழிகளால் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘‘இந்த ஆய்வறிக்கை மூலம் சாலையை பராமரிக்க வேண்டிய அதிகாரிகள் பொறுப்பின்றி மெத்தனமாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது’’ என நீதிபதிகள் சாடினர். உடனடியாக இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக பரிசீலனை செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகள் வழங்கும்படி சுப்ரீம் கோர்ட் சாலை பாதுகாப்பு கமிட்டிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கமிட்டி தன் அறிக்கையை இரண்டு வாரங்களில் சமர்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்