பேட்மிட்டன்:சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து !

பேட்மிட்டன்:சாம்பியன் பட்டம் வென்ற  பி.வி.சிந்து !

வளர்ந்துவரும் இந்தியாவின் இளம் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து கடந்த மே மாதம் நடந்த மலேசிய ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பிறகு ஆகஸ்ட் மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். சர்வதேச போட்டியில் முத்திரை பதிக்கும் இவர் தற்போது மக்காவ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
nov 31_PV_Sindhu.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் கும்பு மகாவ் ஓபன் கிராண்ட்பிரீ கோல்டு பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், கனடாவைச் சேர்ந்த லி மிச்சலேவும் மோதினார்கள்.

இதில் சிந்து 21-15, 21-12 என்ற நேர்செட்டில் எளிதில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியை பெற அவருக்கும் 37 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts