அஞ்சலி நடிக்கும் புது திகில் 3டி படம் ‘லிசா’
கோலிவுட் மற்ரும் டோலிவிட்டில் பிசியாகி விட்ட நடிகை அஞ்சலி ‘நாடோடிகள் 2’, விஜய் சேதுபதி ஜோடியாக இன்னும் பெயர் வைக்கப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இதுதவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.இந்நிலையில், ‘லிசா’ எனும் திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஞ்சலி.
இத்தனைக்கும் ஜெய், அஞ்சலி இணைந்து நடித்த ‘பலூன்’ என்ற பேய்ப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு பேய்ப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஞ்சலி. பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குன ருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். ‘லிசா’ படத்தில் அஞ்சலி பேயாக நடிக்கவுள்ளார். சற்று முன்பு ட்விட்டரில் ‘லிசா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திகில் படமாக உருவாகவிருக்கும் ‘லிசா’ படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக்க உள்ளனர் . ஸ்டீரியோ ஸ்கோபிக் தொழில் நுட்பத்தில் 3டி-யில் உருவாகும் முதல் இந்தியப் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, படத்தொகுப்பாளராக கெளதம் பணியாற்றுகிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.



