தமிழ் குரல் / AI Voice
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரம் நிருபர்களிடம் பேட்டியளித்த.போது, “காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து போதிய பெரும்பான்மை பலம் உள்ளதை ஆளுநரிடம் நிரூபித்துள் ளோம். இருப்பினும் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும். பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், 117 பேரின் ஆதரவு கடிதத்தை குமாரசாமி வழங்கியுள்ளார். ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? மாநில ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டப் பதவியில் உள்ளவர். அவர் சட்டவிரோதமான பாதையில் செல்லக் கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து, பெரும்பான்மை உள்ள அணியையே அழைத்திருக்க வேண்டும்”என்று அவர் கூறினார்.


