ஜோதிகா நடிக்கும் படத்தின் பெயரை சொன்னால் ஒரு நாள் விஐபி ஆகலாம்!
இதைத்தொடர்ந்து ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‘துமாரி சுலு’. இதன் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக விதார்த் நடிக்கிறார். மொழி, அபியும் நானும் போன்ற ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் ராதாமோகன் இப் படத்தை இயக்கவுள்ளார். . இப்படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார். வித்யாபாலன் நடித்த ஆர்.ஜே கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். நேஹா தூபியா நடித்தகேரக்டரில் லக்ஷ்மி மஞ்சு நடிக்கிறார்.
நடிகர் விதார்த் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார். ராதாமோகன் இயக்கும் படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிரோட்டமுள்ளதாக இருக்கும் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஜோதிகாவின் படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், ”ஜூன் 2018 முதல் சென்னையில் எங்கள் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. துமாரி சுலு என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடியப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். ஜோதிகா – விதார்த் இன்னும் பலர் நடிக்கின்றனர். நீங்கள் அனைவரும் படப்பிடிப்புத் தளத்துக்கு வரவேற்கப்படுகிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்.. படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை யூகித்துச் சொல்ல வேண்டும்.



