32°C
விளம்பரம்
Advertisement

தமிழ் ரசிகர்களுக்கு ‘பாகுமதி’ படம் மிகவும் பிடிக்கும்! – அனுஷ்கா நம்பிக்கை!.

admin சேலம் Published: January 17, 2018 2 நிமிட வாசிப்பு Updated: January 18, 2018 Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய திரைப்படம் “பாகமதி”. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.  தேவசேனாவாக வந்து உலக சினிமா ரசிகர்களின் மனதைக் கட்டிப்போட்ட  அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன் ஜெயராம், உன்னி முகுந்தன் மற்றும் ‘பாபநாசம்’ படத்தில் கமலுடன் நடித்த ஆஷா சரத் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன்’ – தயாரிப்பில்  ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் மிரட்டும் வகையில் இருந்த து. தமன் இசை யமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  அத்துடன்   இப்படத்தின் இசை, மற்றும் மந்த்ரா லிரிக்கல் வீடியோ-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அதுவும் ஹிட் ஆனது.

இந்நிலையில்  வரும் 26ம் தேதி திரைக்கு வர இருக்கும் ‘பாகுமதி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, நேற்று அவர் சென்னை வந்தார். அப்போது நிருபர்களுக்கு அனுஷ்கா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

 

“பாகுபலி படத்துக்கும், பாகுமதி படத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது, வேறு கதை. இது, வேறு கதை. இது, ஒரு திகில் படம். இதில், ‘சஞ்சனா’ என்ற ‘ஐ.ஏ.எஸ்.’ அதிகாரியாக நடித்து இருக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய இருவரும் எனக்கு நன்றாக அறிமுகமானவர்கள். கதையும், கதாபாத்திரமும் எனக்கு பிடித்து இருந்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.
இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைதான். உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்து இருந்தார். தமிழ் ரசிகர்களுக்கு ‘பாகுமதி’ படம் மிகவும் பிடிக்கும். படத்தில், எனக்கு சண்டை காட்சிகள் கிடையாது.”இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
பேட்டியின்போது பட அதிபர் கே.ஈ.ஞானவேல் ராஜா, டைரக்டர்கள் அசோக் ஆகிய இருவரும் உடன் இருந்தனர்.

 

 

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்