U சர்டிபிகேட் வாங்கிய நிமிர்’ தலைப்பை பரிந்துரை செய்த இயக்குநர்!?

U சர்டிபிகேட் வாங்கிய நிமிர்’ தலைப்பை பரிந்துரை செய்த இயக்குநர்!?

எந்த ஒரு படத்திற்கும் தகுந்த சென்சார் சான்றிதழ் என்பது மிக முக்கியமான அங்கீகாரம் ஆகும். உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிமிர்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் தரப்பட்டுள்ளது.

குடும்பங்களோடு ரசித்து கொண்டாடக்கூடிய படங்களை தருவதற்கு பெயர் போன பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘நிமிர்’ டைட்டில் குறித்து  “எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குநர் மகேந்திரன் அவர்களின் பெரிய ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிய ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் ‘நிமிர் ‘ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிக பெருமையான விஷயம். நான் பல காலமாக ஒருவருக்கு ரசிகனாக இருந்து, தற்பொழுது அவரையே இயக்குவது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தை தருகின்ற ஒரு உணர்வு.
இப்படத்தின் கதையை முழுவதும் கேட்டதும் மகேந்திரன் சார் தான் ‘நிமிர்’ என்ற தலைப்பை பரிந்துரை செய்தார். இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பை எங்களால் யோசிக்க முடியாது. படத்தில் ஹீரோவின் தந்தை பாத்திரத்தில் மகேந்திரன் சார் நடித்துள்ளார். இந்த தந்தை மகன் உறவே இக்கதையின் அடித்தளம் ஆகும். ‘நிமிர்’ மிகவும் திருப்திகரமாக வந்துருக்கின்றது” என்றார்.

சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ள இந்த ‘நிமிர்’ படம் இதில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவர் சினிமா வாழ்க்கையிலும் மற்றுமொரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஏகாம்பரம் ஒளிப்பதிவில், ஐயப்பன் நாயர் M S படத்தொகுப்பில், சமுத்திரக்கனியின் வசனத்தில், தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில், மோகன் தாஸின் கலை இயக்கத்தில் ‘நிமிர்’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் M S பாஸ்கர், சமுத்திரக்கனி மற்றும் ஷண்முகராஜ் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Related Posts