புளூவேல் கேம்-மை விடப் பல மடங்குப் பெரிய பிரச்னையை சொல்ல வரும் ‘கீ’ டீசர்!
நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ போன்ற படங்களை தயாரித்த குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம், தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வழங்கியது. இதன் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கீ’. இது இந்த நிறுவனத்தின் 10-வது படம். இதில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள். இரண்டாம் நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசை-விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு-அனிஷ் தருண் குமார், படத் தொகுப்பு-நாகூரான், தயாரிப்பு-எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை-அசோக், நடனம்- ‘பாபா’ பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ். செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காளீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கியது.
இயக்குநர் காளீசிடம் படத்துக்கு ‘கீ’ என்று பெயர் வைத்தது ஏன் என்று கேட்ட போது, ” இந்த டைட்டில் ஏன் என்பது பற்றி முன்பே ஒரு முறை உங்களிடம் சொல்லி ஆந்தை ரிப்போர்ட்டர்-ல் வந்து விட்டது” என்றவர் தொடர்ந்து “ இந்தக் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாகவே சொன்னேன். அவரும் அப்போதே நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால், சரியான தயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தால் படம் தள்ளிப்போனது. இந்தப் படத்தின் கதையைத் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தயாரிப்பாளர்களிடமும் நான் சொல்லியிருக்கிறேன். ஒரு வித்தியாசமான கதை களமாகத்தான் இந்தப் படம் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவுக்கு இருக்கும். ஒரு புளூவேல் கேம்மால் எத்தனைப் பாதிப்புகள் வருகிறதோ, அதேபோல் ஸ்மார்ட் போனால் பலர் அவர்களையும் அறியாமல் எத்தகைய பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதைப் படம் சொல்லும். இது ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஹேக்கர் சம்பந்தமான கதை.
ஸ்மார்ட் போன் யார் யார் கையில் இருக்கிறதோ அவர்களுக்கான படம். ரத்தில் ஹேக்கராகவும் நடித்திருக்கிறார். இந்தக் கதையை ஜீவாவிடம் சொன்ன நாளிலிருந்தே இந்தக் கதையில் நடிக்க ஆர்வம் காட்டினார். ரொம்ப ஜாலியான பையனாகவும் படத்தில் நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜிவுடன் அவரது கோம்போ படத்தில் நன்றாக வந்திருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போது இவர்கள் கூட்டணி காரணமாகக் கலகலப்பாகயிருக்கும்.

இந்தப் படம் தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரிலீஸாவதுதான் படத்துக்கான வெயிட்டையை அதிகப்படுத்துவதாக இருக்கும். ஏனென்றால், ஒரு புளூவேல் கேம்யால் எவ்வளவு பிரச்னையை இந்தச் சமுதாயம் சந்தித்திருக்கிறது. இந்தப் படத்தில் புளூவேல் கேம்யைவிடப் பல மடங்குப் பெரிய பிரச்னையை ஒரு விஷயம் எத்தகையப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் காட்டியிருக்கிறேன். அது என்ன விஷயம் என்பது சஸ்பென்ஸ். உங்களை வேறு உலகத்துக்குக் கண்டிப்பாக இந்தப் படம் கூட்டிச் செல்லும்” என்றார்.
இதனிடையே நேற்று வெளியான இப்படத்தின் டீசர் இதோ:


