தமிழ் குரல் / AI Voice
அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி துப்பாக்கிசூடு நடத்துகின்றனர். இதில் அப்பாவி மக்கள் மற்றும் மாணவர்கள் இறக்கின்றனர். இதனை தடுக்க அமெரிக்க அரசு பல்வெறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்லூரி வளாகத்தில் ஏற்படும் துப்பாக்கிச்சூட்டை தடுக்க மாநில சட்டமன்றம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதன் படி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாம். இது அவர்களின் தற்காப்புக்காக இயற்றப்பட்டது என தெரிவிக்கின்றனர்.

அர்கனாஸ் ,ஜார்ஜியா மற்றும் சில நாடுகளில் இந்த சட்டம் ஏற்கனவே உள்ளது. அத்துடன் கனாஸ் தற்போது இணைந்துள்ளது. ஆனால் கலிபோர்னியா மற்றும் தென் கரொலினா உட்பட 16 நாடுகளில் இதற்கு தடை விதித்துள்ளனர். ஆனாலும் கனாஸின் சில கல்லூரிகளில் இதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. இச்சட்டம் பற்றி நிர்வாகம் தெளிவாக விவரித்த பிறகும் கல்லூரியில் உள்ள சில ஆசிரியர்கள் தங்கள் வேலையிலிருந்து வெளியே செல்வதாக தெரிவித்துள்ளனர்.
கனாஸ் பல்கலைகழகத்தின் ஆங்கில பேராசிரியர் பிலிப் நீல், வேறு வேலைக்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆயுதம் ஏந்திய மாணவர்களுக்கு என்னால் பாடம் நடத்த முடியாது. இது மிகவும் விசித்திரமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டுப்போட்டி மற்றும் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது துப்பாக்கி பயன்படுத்தக்கூடாது என பல்கலைகழகத்தினர் தெரிவிக்கின்றனர். இச்சட்டம் மனநல மருத்துவமனை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கிறது.
