பாகுபலி 2 -ன் சிறப்பம்சம் என்ன தெரியுமா? – தயாரிப்பாளர் ஷோபு தகவல்!
நாளை மறு நாள் வெளியாகவுள்ள பாகுபலி 2 திரைப்படம், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதன் மூலம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது. மேலும் அமெரிக்க நாடுகளில் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகும் (1000 தியேட்டர்கள்) படம் என்ற புதிய சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. இந்நிலையில் ‘பாகுபலி’ படத்தை மையமாக வைத்து வெளியான புத்தகங்களை தொலைக்காட்சி தொடர்களாக எடுக்கவும் திட்டம் இருப்பதாக அதன் தயாரிப்பாளர் ஷோபு யாரலகட்டா தெரிவித்துள்ளார்.

மேலும் படம் குறித்து பேசிய ஷோபு, “பாகுபலியின் இரண்டாம் பாகம் அதனின் முதல் பாகத்தினை விட மிகப்பிரம்மாண்டமாக நிச்சயமாக இருக்கும், அடிப்படையில் இப்படத்தின் முதல் பாகம் அனைத்து கதாப்பாத்திரங்களை பற்றியும் ஒரு அறிமுகப்படுத்தும் படமாக அமைந்தது, ஆனால் அதன் இரண்டாம் பாகத்தில் கதைக்களம் மற்றும் உணர்சிவசப்பக்கூடிய காட்சிகளும் உண்டு, அதனால் சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் அதிகமாக இருக்கும்” இது போன்ற விஷயங்களால் அமேரந்திர பாகுபலிக்கும் பல்லாலதேவனுக்கும் இடையே நடக்கும் பழிவாங்கும் போர்காட்சிகள் 120 நாட்கள் படமாக்கப்படுள்ள பிரம்மாண்டத்தை நம்மால் அறிந்துக்கொள்ள முடிகிறது,அதுமட்டுமின்றி அழகிய தேவசேனாவிற்கும் மகாராணியான சிவகாமிக்கும் இடையே உள்ள பகமையும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும்”என்றார்
இப்படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் படம் முழுக்க விர்ச்சுவல் ரியாலிட்டியில் மக்கள் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஷோபு இதுப் பற்றி விவரித்த போது “நம்முடைய தயாரிப்பு நிறுவனமும் ஏ.எம்.டி.ரேடியான் டெக்னாலஜிஸ் குழுமம் இணைந்து பாகுபலி படத்தை விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் படமாக்க BB360 கேமராவை தயார் செய்தோம். உலக அளவில் VR முறையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தனித்தன்மையோடு நிச்சயம் விளங்கும். இப்படம் ‘SWORD OF BAAHUBALI’ என்றழைக்கப்படும், இந்தியா முழுக்க சுமார் 100 இடங்களில் 20 நகரங்களில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் பணம் செலுத்தி, ஒரு அறையின் உள்ளே சென்று HTC VIVE என்ற கண்ணாடியை அணிந்தால் மகிழ்மதி ராஜ்ஜியத்தையும் மற்றும் அங்கு உலாவும் மக்களையும் நேரில் சந்திக்கும் அனுபவத்தையும் பெறலாமாக்கும்”என்றார்


