சென்னை மெரினா + சுற்றுப்பகுதிகளில் 144 தடை உத்தரவு!
சென்னை மெரினாவில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறை கூடுதல் ஆணையர் சங்கர் அறிவித்துள்ளார். கடற்கரை ஒட்டிய அண்ணாசதுக்கம், திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், பட்டினப்பாக்கம் பகுதிகளில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் பிப்ரவரி 12-ம் தேதி வரையிலான தடை உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

முன்னதாக மெரினாவில் போராட்டம் நடத்த தடைவிதித்து நேற்று போலீஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது. உண்ணாவிரதம், போராட்டம், பேரணி, மனிதச் சங்கிலி நடத்தவும் அனுமதி இல்லை காவல் துறை அறிவித்துள்ளது. மெரினாவில் நடைபயிற்சிக்காக வருபவர்களுக்கு தடை இல்லை எனவும் கூடுதல் ஆணையர் சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர்ளிடம் பேசிய போது.,“ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து மாணர்களுக்கு விளக்கினோம். காவல்துறை சொன்னதைக் கேட்டு மாணவர்கள் கலைந்து செல்ல விரும்பினார்கள். ஆனால், சிலர் போராட்டத்தை கைவிட மறுத்தார்கள். குறிப்பாக மெரினாவில் குடியரசு தின விழாவை நடத்தவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தனர்.
காவலர்களிடம் லத்தி கொடுக்கவில்லை. மாணவர்கள் மீது தடியடி நடத்தவில்லை. குப்பத்தில் இருந்து கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசிய பிறகே வன்முறையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தது’ என்றார். மேலும், இந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் போராட்டத்தின் போது மெரினாவில் காவல்துறை எடுத்த நடவடிக்கைகளின் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குப்பத்தில் இருந்து சிலர் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவும் காட்டப்பட்டது


