முழுமையான வசதிகள்., அடிசினல் இருக்கைகள் – பிரசாத் லேப் தியேட்டர்…!

முழுமையான வசதிகள்., அடிசினல் இருக்கைகள் –  பிரசாத் லேப் தியேட்டர்…!
ஒரு சினிமாவை டைரக்ட் செய்யும் இயக்குனர் தொடங்கி படமாக்கும் ஒளிப்பதிவாளர், ஒலியைச் சேர்க்கும் ஒலிப்பதிவாளர் என்று ஒவ்வொரு டெக்னிஷியன்களும் தங்களின் படைப்பு எப்படி தரமாக வந்திருக்கிறது என்பதைத் ஆகச் சிறந்த தியேட்டர்களில் போட்டு அறிந்துக் கொள்வது வாடிக்கை. அதாவது மக்கள் பார்க்க தியேட்டர்களுக்கு வரும் முன் அது பிரிவியூ தியேட்டர் என்றழைக்கப்படும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு சோதனை செய்யப்படும். அதற்கு தரமான அனைத்து வசதிகளும் கொண்ட பிரிவியூ தியேட்டர்கள் தேவை.சென்னையில் விரல் விட்டு எண்ணக் கூடிய தியேட்டர்கள்தான் உள்ளன. அதில் குறிப்பாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டர்.
prasad dec 30

இங்கு படத்தைத் திரையிட்டு பார்ப்பதற்கு தொழில்நுட்பக் கலைஞர்களும், பத்திரிகையாளர் காட்சியைப் பார்ப்பதற்கு பத்திரிகையாளர்களும் மிகவும் விரும்புவர்.அவர்களது விருப்பத்தை மேலும் அதிகமாக்கும் முயற்சியில் புதிதாக மேலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கல்யாணம், பிரசாத் லேப் நிர்வாக இயக்குனரான ரமேஷ் பிரசாத் ஆலோசனையுடன் செய்ய ஆரம்பித்து திறம்பட நடத்தி வந்தவர் தற்போது மேலும் சில நவீனமயப்படுத்தி வருகிறார்.

இது குறித்து, “தமிழ் திரையுலகில் பழம் பெருமை மிக்க “பிரசாத் லேப் ” நிறுவனத்தின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது ” பிரசாத் ப்ரிவியூ தியேட்டர் “. 128 இருக்கைகள் மட்டுமே இருந்த ப்ரிவியூ தியேட்டர் நிர்வாகியாக நான் பொறுப்பேற்ற பின் நிர்வாகத்தினரிடம் கூறி தியேட்டர் நவீனமயமாக்கப்பட்டது.

தியேட்டரில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு வணிக ரீதியாக நடத்தப்பட்டு வரும் தியேட்டர்களில் உள்ள நவீனமான 190 குஷன் இருக்கைகள் பொருத்தப்பட்டு முன்னை காட்டிலும் அதிகம் பேர் படம் பார்க்கும் வண்ணம் தியேட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் இருக்கைகள் போடும் வசதியும் உள்ளது. கூடுதல் இருக்கைகளுடன் மொத்தம் 230 பேர் லேப் தியேட்டரில் அமர முடியும்.
திரைப்படங்களை பளிச்சென்றும், துல்லியமாகவும் பார்வையாளர்கள் பார்த்து பரவச நிலை அடையும் வண்ணம் பழையஸ் கீரின் அகற்றப்பட்டு  பல லட்ச ரூபாய் மதிப்புடைய சில்வர் ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது.
ஒலி ஒளி அமைப்பு துல்லியமாக இருக்கும் வகையில் 45லட்ச ரூபாய் செலவில் 4 K தொழில் நுட்பம் மேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருத்தப்பட்டுள்ள முதல் ப்ரிவியூ தியேட்டர் ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர் மட்டுமே.
அதுமட்டுமல்ல, கூடுதலாக பார்வையாளர்கள் வரும்பட்சத்தில், அருகிலேயே உள்ள 70 எம்எம் அரங்கிலும் அமர வைக்க தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரையரங்கம் ஆசியாவிலேயே முதல் பெரிய 70 எம்எம் திரை கொண்ட நவீன அரங்காகும். இங்கு 80 பேர் வரை அமர்ந்து படம் பார்க்கலாம்.
விஐபிகள் – செய்தியாளர்கள் சந்தித்துப் பேச நவீன குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெரிய அறையும் லேப் தியேட்டரிலேயே உள்ளது.
இந்த அரங்குகளில் கழிப்பறைகள் நவீனமயமாக்கம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
250இருக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி கொண்ட ஒரே ப்ரிவியூ தியேட்டர் சென்னையில் “ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர் ” மட்டுமே என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவரும் நன்கறிவார்கள். அதை மீண்டும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!| ” என்று தெரிவித்தார்.

 

Related Posts