Skip to content
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web
  • About Us
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
    • Privacy Policy
    • Terms and Conditions
  • Contact Us
  • Home
  • இந்தியா
  • மாசம் 5000 சம்பளதாரரின் ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி!! பிரதமரிடம் புகார்

மாசம் 5000 சம்பளதாரரின் ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி!! பிரதமரிடம் புகார்

  • admin
  • December 27, 2016
  • இந்தியா
மாசம் 5000 சம்பளதாரரின் ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி!! பிரதமரிடம் புகார்
0
SHARES
ShareTweet

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ஷீட்டல் யாதவ். இவர் ஷர்தா சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ளார். இவரது கணக்கில் கடந்த 18ஆம் தேதி ரூ. 100 கோடி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து, இவரது கணவர் ஜிலேதர் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

bank dec 27

அதாவது இந்திய ஸ்டேட் வங்கியின் மீரட், ஷர்தா சாலை கிளையில் ஷீத்தல் யாதவ் பெயரில் ஜன் தன் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. அதில் தன்னுடைய வரவு செலவுக் கணக்குகளை கவனித்து வந்தார் ஷீத்தல். டிரான்ஸ்ஃபார்மர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஷீத்தலின் கணவர். அங்கேயே பேக்கேஜிங் பிரிவில் மாதம் 5,000 ரூபாய் சம்பளத்துக்கு பணிபுரிகிறார் ஷீத்தல்.

கடந்த டிசம்பர் 18-ம் தேதி, அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றவர் அதிர்ச்சியால் உறைந்துள்ளார். அவரின் கணக்கில் ரூ.99,99,99,394 வரவு வைக்கப்பட்டிருந்தது. உடனே வங்கிக்குச் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஷீதல் இதைக் கூற, அவரோ கிளை மேலாளர் வந்த பிறகு சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று முறை வங்கிக்குச் சென்ற ஷீத்தல் குடும்பத்துக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

உள்ளூர் வங்கி அதிகாரியிடம் பதில் கிடைக்காததால் மன உளைச்சல் அடைந்த சிங், படித்த நபர் ஒருவரை அணுகி பிரதமர் அலுவலகத்துக்கு மெயில் அனுப்ப உதவும்படி கேட்டுள்ளார். இதுகுறித்துப் பேசிய சிங், ”டிசம்பர் 26 அன்று பிரதமர் அலுவலகத்துக்கு ஈ-மெயில் அனுப்பினோம். ஜன் தன் கணக்கில் ரூ. 50,000 பணத்தை மட்டுமே வரவு வைக்கமுடியும் என்ற நிலையில், அதில் ரூ.100 கோடி எப்படி வந்தது என்ற பிரச்சினையை பிரதமர் அலுவலகமே தீர்த்துவைக்க முடியும்” என்று கூறியவர், தன்னுடைய ஏடிஎம் ரசீதுகளையும், வங்கி பாஸ்புக்கையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார். இதுகுறித்து விளக்கம் கேட்க வங்கியை நாடியபோது, அதிகாரிகள் பேச மறுத்துவிட்டனர்.

0
SHARES
ShareTweet

Accountjan dhan yojanaModione crore

Post navigation

Prev
Next

Related Posts

யுடியூபர்களுக்கு அங்கீகாரம்; பிராண்டுகளுக்கு நெருக்கடி: புதிய மசோதாத் தகவல்!
  • Exclusive
  • இந்தியா

யுடியூபர்களுக்கு அங்கீகாரம்; பிராண்டுகளுக்கு நெருக்கடி: புதிய மசோதாத் தகவல்!

  • admin
  • April 18, 2026
மகளிர் மசோதா வீழ்ந்ததன் பின்னணியில் ‘மோடி டீமின்’ சறுக்கல்?
  • Exclusive
  • இந்தியா

மகளிர் மசோதா வீழ்ந்ததன் பின்னணியில் ‘மோடி டீமின்’ சறுக்கல்?

  • admin
  • April 17, 2026
பணப்பந்தய விளையாட்டுகளுக்குத் தடை: முடங்கியது 6 பில்லியன் டாலர் சாம்ராஜ்யம்!
  • Exclusive
  • இந்தியா

பணப்பந்தய விளையாட்டுகளுக்குத் தடை: முடங்கியது 6 பில்லியன் டாலர் சாம்ராஜ்யம்!

  • admin
  • April 13, 2026
கேரளத் தேர்தலில் ‘ஏஐ’ மேஜிக்: தமிழகம் கற்க வேண்டிய பாடம் என்ன?
  • Exclusive
  • இந்தியா

கேரளத் தேர்தலில் ‘ஏஐ’ மேஜிக்: தமிழகம் கற்க வேண்டிய பாடம் என்ன?

  • admin
  • April 13, 2026
பனிலிங்கமும், பரவசப் பயணமும்: அமர்நாத் யாத்திரை 2026 – ஓர் அரிய பார்வை
  • Exclusive
  • இந்தியா

பனிலிங்கமும், பரவசப் பயணமும்: அமர்நாத் யாத்திரை 2026 – ஓர் அரிய பார்வை

  • admin
  • April 12, 2026
சமையலறை கழிவு… இனி நகரின் மின்சாரம்!
  • Exclusive
  • இந்தியா

சமையலறை கழிவு… இனி நகரின் மின்சாரம்!

  • admin
  • April 7, 2026

Follow Me

  • facebook
  • twitter
  • instagram
  • youtube

Aanthaireporter.in

Add AanthaiReporter.Com | Tamil Multimedia News Web to your Homescreen!

Add