தமிழ் குரல் / AI Voice
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் வொர்க் ஷாப், ரயில் சக்கர ஆலை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1299.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: டிராக் மேன் – 621, ஹெல்பர் – டிஎம்ஓ – 104, ஹெல்பர் பிரிட்ஜ் – 01, ஹெல்பர் பி வே – 13, ஹெல்பர் வொர்க்ஸ் – 62, ஹெல்பர் சிவில் இன்ஜினி யரிங் – 16, ஹெல்பர் மெக்கானிக் – 129, ஹெல்பர் டீசல் மெக்கானிக் – 03, ஹெல்பர் எலக்ட்ரிக்கல் – 06, ஹெல்பர் எலக்ட்ரிக்கல் (ஆர்டபிள்யூஎப்) – 59, ஹெல்பர் (சிக்னல் மற்றும் டெலிகாம்) – 57, ஹெல்பர் (ஸ்டோர்ஸ்) – 06, , போர்ட்டர், ஹமால்,ஸ்வீப்பர் – 155, சபேவாலா – 62, ஹெல்பர் மெக்கானிக் – 05.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2014 தேதிப்படி 18 முதல் 33-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Assistant Personnel Officer/Rectt/SWR/UBL என்ற பெயரில் HUBLமில் மாற்றத்தக்க வகையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in. என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Personnel Officer/Recruitment,
Railway Recruitment Cell,
Divisional Office Compound, HUBLI- 580020.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2013.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.rrchubli.in./ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
