ஆசிய விளையாட்டு போட்டிகள் – 2026ல் நடத்த்தும் பொறுப்பு ஜப்பானுக்கு கிடைத்தது

ஆசிய விளையாட்டு போட்டிகள் – 2026ல் நடத்த்தும் பொறுப்பு ஜப்பானுக்கு கிடைத்தது

நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் ‘ஆசியாட்’ (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றறது.முதல் ஆசிய விளையாட்டில் பதினோரு நாடுகள் பங்கு கொண்டன.

asian games sep 26

17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியா நாட்டின் இஞ்சியோன் நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 04 2014 வரை நடைபெற்றன.ஆசிய விளையாட்டுப் இடைத்தொலைவு ஓட்டப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் சாந்தி சௌந்திரராஜன் ஆவர். இந்நிலையில் இப்போட்டி 18–வது ஆசிய போட்டி 2018–ம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகர்த்தா, பாலெம்பாங் நகரங்களிலும், 2022–ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவ் நகரத்திலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 2026–ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமத்தை ஜப்பான் தட்டிச்சென்றுள்ளது. அங்குள்ள ஏய்ச்சி பிரிபெக்சர் மற்றும் நகோயா ஆகிய நகரங்களில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 2020–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியும் ஜப்பானில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.