இளங்கோவனால் புத்துணர்ச்சி : ஆனா விஜயதரணி எதற்கும் கட்டுப்படாதவர்! – த. காங்கிரஸ் சர்ச்சை
ஈ வி கே எஸ் இளங்கோவன் மீது சர்ச்சைப் புகார் கிளப்பிய மகளா காங்கிரஸ் மாநிலத் தலைவியும், எம்எல்ஏ வுமான விஜயதரணியை காங்கிரஸை விட்டே உடனடியா நீக்க வேண்டும் என அக்கட்சியின் 49 மாவட்டத் தலைவர்கள் வலியுறுத்தி தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளயுள்ளனர்.

கடந்த வாரம் நடந்த இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னையில் சத்தியமூர்த்தி பவன் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனிடம் விஜயதரணி முறையிடச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு விஜயதரணி கடிதம் எழுதினார். இதோடு, இருவரின் ஆதரவு மகளிரணி நிர்வாகிகளும் தனித் தனியே அளித்த புகார்களின் பேரில் இரு தரப்பினர் மீதும் போலீஸார் சனிக்கிழமை வழக்குகளைப் பதிந்துள்ளனர்.
இந் நிலையில், காங்கிரஸில் மொத்தம் உள்ள 61 மாவட்டத் தலைவர்களில் 49 மாவட்டத் தலைவர்கள் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “ மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஓராண்டாக கட்சிக்கு புத்துணர்ச்சி வழங்கும் வகையில் செயலாற்றி வருகிறார். கட்சியில் உள்ள சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவனிடம் விஜயதரணி முறையிட்ட விதத்தை எவருமே ஏற்க முடியாது. இதன் அடிப்படையில், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இளங்கோவன் மீது காவல் நிலையத்துக்குச் சென்று கிரிமினல் புகார் கொடுத்ததை விட கட்சி விரோத நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது.
எதற்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் விஜயதரணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்க வேண்டும். இந்த ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்குக் காரணமான விஜயதரணி உள்ளிட்டவர்கள் மீது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


