லிங்கா நஷ்ட ஈடு முழுசா வேணும்! -விநியோகஸ்தர்கள் டிமான்ட்!

லிங்கா நஷ்ட ஈடு முழுசா வேணும்! -விநியோகஸ்தர்கள் டிமான்ட்!

‘லிங்கா’ படத்துக்கு ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அவற்றை திருப்பி தர வேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதமும் இருந்தார்கள்.
rajni14
ரஜினி இப்பிரச்சினையில் தலையிட்டு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கெடுக்கும்படி கோவை விநியேகாஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்தை நியமித்தார். அவரும் நஷ்டஈடு விவரங்களை திரட்டி அளித்துள்ளார். இதையடுத்து நஷ்டஈடாக ரூ.3½ கோடி அளிக்க படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முன் வந்துள்ளார். இதனை விநியோகஸ்தர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

இதுகுறித்து விநியோகஸ்தர் சிங்காரவேலு,”‘லிங்கா’ படத்துக்கு ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கணக்கு விவரங்களை திருப்பூர் சுப்பிரமணியத்திடம் சமர்ப்பித்தோம். அவரும் ரஜினியிடம் பேசி வாங்கித் தருவதாக தெரிவித்தார். இப்போது தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் 10 சதவீதமாக ரூ.3½ கோடி மட்டுமே நஷ்டஈடாக தர முடியும் என்கிறார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டோம். மீண்டும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். எந்த மாதிரியான போராட்டம் என்பதை இன்று மஃஅலை அறிவிப்போம்.”என்று அவர் கூறினார்.

Related Posts