32°C
விளம்பரம்
Advertisement

சூரியின் ‘மண்டாடி’ கடல் வேட்டை-செப்டம்பர் 10 திரைக்கு வருகிறது!

admin Published: August 28, 2026 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


காமெடி நடிகராகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கி, இன்று அழுத்தமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் சூரி, இந்தப்  “மண்டாடி’’ படத்திற்காகத் தன் உடலையும் உழைப்பையும் முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.கடல் அலையின் கொந்தளிப்பில் பாய்மரப் படகை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகச் சூரி, எவ்வித டூப் கலைஞர்களின் உதவியுமின்றி நேரடியாகக் கடலில் இறங்கி நடித்திருக்கிறார். இதற்காகப் பல மாதங்கள் கடுமையான பாய்மரப் படகு பயிற்சி எடுத்துக்கொண்ட அவர், ஆழ்கடல் பகுதியில் படமாக்கப்பட்ட ஆபத்தான காட்சிகளில் தத்ரூபமாக நடித்துள்ளார். அவரது இந்த அர்ப்பணிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

IMAX தொழில் நுட்பத்தில் கரையேறும் ஆழ்கடல் அனுபவம்

ஆழ்கடலில் நடைபெறும் பரபரப்பான காட்சிகளையும், கதாபாத்திரங்களின் தீவிரமான உடல் உழைப்பையும் ரசிகர்கள் திரையரங்கில் முழுமையாக உணர்வதற்காக ‘மண்டாடி’ திரைப்படம் இந்தியா முழுவதும் IMAX ஃபார்மேட்டில் வெளியாகிறது.

கடலின் இயற்கையான வேகம், காாற்றின் ஹோரை, அலைகளின் சீற்றம் மற்றும் நீரின் கொந்தளிப்பு ஆகியவற்றை IMAX-ன் பிரமாண்டமான காட்சி மற்றும் ஒலித் தொழில் நுட்பம் மிகத் துல்லியமாக ரசிகர்களுக்குக் கடத்தும். திரையரங்கில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு ரசிகனையும் கடலின் நடுவே கொண்டு நிறுத்தும் ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கம் என்று தயாரிப்புத் தரப்பு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

பிரம்மாண்டமான கலை மற்றும் தொழில்நுட்பக் கூட்டணி

இப்படத்தின் பின்னணியில் இந்திய சினிமாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் கை கோர்த்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை கதையின் உணர்ச்சிகரமான தருணங்களுக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறது. எஸ்.ஆர். கதிர் ISC தனது ஒளிப்பதிவின் மூலம் ஆழ்கடலின் அழகையும் அதன் அச்சுறுத்தலையும் ஒருசேரக் கேமராவில் சிறைப்பிடித்துள்ளார்.

பிரதீப் இ. ராகவின் படத்தொகுப்பும், டி.ஆர்.கே. கிரணின் கலை இயக்கமும் படத்திற்கு மேலும் மிளிர்கின்றன. குறிப்பாக, ஆபத்து நிறைந்த கடல் ஆக்‌ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ ஆகிய மூன்று முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

சூரியுடன் இணைந்து சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டண்ட் சிவா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘மண்டாடி’, தமிழ் சினிமா வரலாற்றில் பிரம்மாண்டத்தின் புதிய அடையாளமாக நிச்சயம் பதிவாகும்.

உடனடி செய்திகள்