32°C
விளம்பரம்
Advertisement

ரயில்வேயில் 3,993 ஜூனியர் இன்ஜினியர் பணி வாய்ப்பு!

admin Published: August 15, 2026 5 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ந்திய ரயில்வேயில் மத்திய அரசு வேலை பெற விரும்பும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளைஞர்களுக்கு முக்கியமான வாய்ப்பு வெளியாகியுள்ளது. Railway Recruitment Boards (RRBs) சார்பில் Centralised Employment Notice (CEN) No.04/2026 என்ற அறிவிப்பின் கீழ் Junior Engineer (JE) மற்றும் Depot Material Superintendent (DMS) உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான Indicative Notice வெளியிடப்பட்டுள்ளது.அறிவிப்பின்படி, விண்ணப்பப் பதிவு 14 ஆகஸ்ட் 2026 அன்று தொடங்கியுள்ளது; 13 செப்டம்பர் 2026 விண்ணப்பிக்க கடைசி நாள். அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 14, 2026 அன்று தொடங்கி செப்டம்பர் 13, 2026 அன்று நள்ளிரவு முடிவடைகிறது.தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தபால் மூலமாகவோ அல்லது நேரில் அளிக்கப்படும் விண்ணப்பங்களோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

junior Engineer: ரயில்வேயின் தொழில்நுட்பப் பொறுப்பில் முக்கியமான பதவி

Junior Engineer அல்லது JE என்பது இந்திய ரயில்வேயில் முக்கியமான தொழில்நுட்பப் பதவிகளில் ஒன்றாகும். ரயில்வே என்பது வெறும் ரயில் மற்றும் தண்டவாளங்களைக் கொண்ட அமைப்பு அல்ல. அதற்குப் பின்னால் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப அமைப்புகள், பராமரிப்பு பிரிவுகள், இயந்திரங்கள், மின்சார அமைப்புகள், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், கட்டுமானப் பணிகள் என மிகப்பெரிய பொறியியல் கட்டமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் Junior Engineer பதவிகளின் பங்கு துறை சார்ந்து மாறுபடும். எனவே, குறிப்பிட்ட JE பதவிக்கு எந்த கல்வித் தகுதி தேவை, எந்த Engineering discipline ஏற்றுக்கொள்ளப்படும், பணியின் தன்மை என்ன என்பது போன்ற விவரங்களை முழுமையான CEN அறிவிப்பில் பார்த்து உறுதி செய்ய வேண்டும். இதுவே இந்த அறிவிப்பை படிக்கும் விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று. Junior Engineer என்ற பெயரை மட்டும் பார்த்து எந்தவொரு Engineering qualification-உம் அனைத்து JE பணிகளுக்கும் பொருந்தும் என்று கருதக்கூடாது.

Depot Material Superintendent: ரயில்வேயின் பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய பொருள் மேலாண்மை அமைப்பு. Depot Material Superintendent என்ற பதவி பல இளைஞர்களுக்கு Junior Engineer அளவுக்கு பரிச்சயமானதாக இருக்காது. ஆனால் ரயில்வேயின் செயல்பாட்டில் இந்தப் பணியின் முக்கியத்துவம் குறைவானது அல்ல. ஒரு ரயில் இயக்கப்படுவதற்கு locomotive, coaches, tracks மட்டுமே போதாது. அவற்றை பராமரிக்க எண்ணற்ற spare parts, engineering materials, maintenance items, tools மற்றும் பிற பொருட்கள் தொடர்ந்து தேவைப்படுகின்றன. இந்தப் பொருட்கள் எங்கு உள்ளன, எவ்வளவு கையிருப்பில் உள்ளன, எப்போது தேவைப்படும், எந்தப் பிரிவுக்கு வழங்க வேண்டும் போன்ற material management நடவடிக்கைகளில் Depot Material Superintendent போன்ற பதவிகளுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது. அதாவது, பயணிகள் கண்களுக்கு தெரியாமல் ரயில்வேயின் பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய supply மற்றும் stores management அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக இந்தப் பதவியைப் பார்க்கலாம்

சம்பள விவரம் மற்றும் அடிப்படைத் தகுதிகள்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் படி ஆரம்ப நிலைச் சம்பளம் வழங்கப்படுகிறது. இளநிலைப் பொறியாளர் பணிகளுக்கு மாதம் 35400 ரூபாய் அடிப்படைச் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பிற படிகளும் சேர்த்து வழங்கப்படும்.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி பட்டியல் பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கமான வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்

இந்திய ரயில்வே தற்போது RRB ஆட்சேர்ப்பு தகவல்களுக்காக Unified RRB Common Website-ஐ பயன்படுத்துகிறது. அதிகாரப்பூர்வ RRB தகவல்களில் candidates-க்கு unified website மூலம் recruitment notifications மற்றும் updates பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RRB Unified Official Website -மேலும் RRB Chennai-யும், RRB தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ RRB இணையதளங்களையே பயன்படுத்துமாறு எச்சரிக்கிறது.

விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள மண்டல ரயில்வே தேர்வு வாரியத்தின் (RRB) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின் சுயவிவரங்கள், கல்வித் தகுதிகள், மண்டலத் தேர்வு போன்ற விவரங்களைத் துல்லியமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றைச் சரியான அளவில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து எதிர்காலத் தேவைக்காக அச்சிட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

🪪 Aadhaar Verification — இந்த முறை ஏன் முக்கியம்?

இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்களில் ஒன்று Aadhaar-based verification. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பும்போது Aadhaar மூலம் தங்களது primary details-ஐ verify செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அறிவிப்பில்:

Aadhaar-ல் உள்ள பெயர்
Aadhaar-ல் உள்ள பிறந்த தேதி
10ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி- ஆகியவை 100% பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் Aadhaar-ல் latest photograph மற்றும் latest biometrics (fingerprint & iris) ஆகியவற்றை update செய்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது ஏன் முக்கியம்?

பெயரில் ஒரு எழுத்து வித்தியாசம், initials தொடர்பான பிரச்சினை அல்லது பிறந்த தேதி mismatch போன்றவை verification நேரத்தில் சிக்கலை உருவாக்கக்கூடும்.
அதனால் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கு முன்பே ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது புத்திசாலித்தனம்.

தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்

ரயில்வே பணியாளர் தேர்வு இரண்டு கட்ட கணினி வழித் தேர்வுகளைக் கொண்டது.

முதல் கட்ட கணினி வழித் தேர்வு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொதுவானது. இதில் கணிதம், பொது அறிவு, பொது அறிவியல் மற்றும் தர்க்க அறிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறும். இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வில் விண்ணப்பதாரர் படித்த தொழில்நுட்பப் பாடம் சார்ந்த கேள்விகள் முதன்மையாக இடம்பெறும்.
இரண்டு கட்டத் தேர்வுகளிலும் தவறான பதில்களுக்குக் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதால் கவனமாகப் பதிலளிப்பது அவசியம்.

வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள்

தினமும் மாதிரித் தேர்வுகளை எழுதிப் பயிற்சி செய்வது தேர்வை விரைவாகவும் துல்லியமாகவும் எழுதி முடிக்க உதவும். கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்களை ஆராய்ந்து எந்தத் தலைப்புகளில் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து படிக்க வேண்டும். நேர மேலாண்மை இந்தத் தேர்வில் மிக முக்கியமான காரணியாக விளங்குவதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.முறையான திட்டமிடலும் தொடர் பயிற்சியும் இருந்தால் இந்திய ரயில்வேயில் கனவுப் பணியைப் பெறுவது உறுதி.

 தச்சை குமார்

உடனடி செய்திகள்