32°C
விளம்பரம்
Advertisement

’மொத ராத்திரி’ பட டிரெய்லர் ரிலீஸ் ஈவண்ட் ஹைலைட்ஸ்!

admin Published: August 13, 2026 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஒரு தனியார் திருமண மண்டபத்துல Proper ஆன கல்யாணம் எப்படி நடக்குமோ அதே மாதிரி ஏற்பாடு செய்து இருந்தனர் படக்குழு. ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் பேச்சுக்கள்:

தயாரிப்பாளர் ரவி சங்கர் பேசுகையில், “இயக்குநர் ராஜா கதை சொன்னபோதே மிகவும் பிடித்துவிட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் பெற்ற வெற்றியைப் போல, நல்ல கதைக்களம் கொண்ட இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.

நடிகர் வெங்கடேஷ், ” ‘அங்காடி தெரு’ படத்திற்குப் பிறகு எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரங்களே அதிகம் வந்தன. ஆனால் இதில் வித்தியாசமான கதைக்களம். புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “இந்தப் படத்தைப் பார்க்கும்போது பாக்யராஜ் சாரின் படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வு இருந்தது. ரிஷி கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார்” என்று பாராட்டினார்.

இயக்குநர் ‘அயலான்’ ரவிக்குமார், “எதை படமாக எடுக்க வேண்டும் என்பதில் தான் ஒரு இயக்குநரின் திறமை உள்ளது. அதை இயக்குநர் சிறப்பாகச் செய்துள்ளார். ரிஷி கதாநாயகனாக அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டார்” என்று வாழ்த்தினார்.

இயக்குநர் பாரி, “பெரிய படங்கள் எப்போதும் உங்களை உற்சாகப்படுத்தும். ஆனால், இதுபோன்ற சின்ன படங்கள் தான் ஆச்சரியப்படுத்தும். பல கருத்துகளை இதில் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

இசையமைப்பாளர் பரத் சங்கர், எடிட்டர் அசோக் அர்ஜூனன், ஒளிப்பதிவாளர் சுரேஷ் பரஞ்சோதி, நடிகை அனிஷ்மா, நடிகர்கள் சேத்தன், ரிஷிகாந்த் மற்றும் இயக்குநர்கள் ஸ்ரீகணேஷ், கீர்த்தீஸ்வரன் உள்ளிட்டோரும் விழாவில் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி பேசுகையில், “தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. என் அனுபவத்தில் இருந்து உருவான கதையை ஆறு வருடப் பயணத்திற்குப் பிறகு திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். இக்கட்டமைப்பை என் வாழ்க்கையில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

கதாநாயகன் ரிஷிகாந்த், “குறும்படமாகத் தொடங்கிய இக்கதை 6 வருடப் பயணத்திற்குப் பின் திரைப்படமாகியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும்படியான நல்ல திரைப்படமாக இது இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உடனடி செய்திகள்