காமப் பசியில் கருகிய குடும்பம்: அபிராமி வழக்கு சொல்லும் பாடம்!
தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் ஒன்று சென்னையில் அபிராமி எனும் பெண் தன் காதலுக்காக பெற்ற பிள்ளைகள் இருவரை கொன்ற வழக்கு, ஒரு தாய் அதை செய்வாளா எனும் அதிர்ச்சியுடன் அவ்வழக்கு தொடங்கி இப்போது அவளும் அவளின் காதலனும் சிறைபட்டிருக்கின்றார்கள். இனி சாகும் வரை அவர்களுக்கு சிறை என நீதிமன்றம் சொல்லிவிட்டது.ஆனால் இந்திய சட்டங்கள் மென்மையானவை, அங்கு சிறுபான்மை மதங்களுக்கும் அவர்கள் உரிமைகளுக்கான பிரிவுகள் தவிர வேறு எல்லாமே பலவீனமானவை. அதனால் சில ஆண்டுகளில் இவர்கள் வெளிவரகூடும்.நடந்தது பெரும் பாதகம், இதுவே கடும் சட்டமுள்ள இஸ்லாமிய நாடுகள் என்றால் நிச்சயம் முச்சந்தியில் தலைவெட்டியிருப்பார்கள் அவ்வளவு கொடும் பாதகம் இது.

அப்பெண்ணுக்கு தன் வாழ்வு தன் உரிமை எனும் ஆசை அதிகம் இருந்திருக்கின்றது, அந்த ஆசையில் அவள் காதலும் சேர்ந்திருக்கின்றது, கணவனை பிள்ளைகளை மீறி அவன் பெரிதாக தெரிந்திருக்கின்றான்.அவளின் ஆசையும் மனமும் கனவும் அவனாக இருந்திருக்கின்றான், இங்கு இன்னொரு பெரும் கொடுமையும் மறைந்திருக்கின்றது அது பிரியாணி.உணவுக்கு அடிமையாவது பெரும் ஆபத்து, ஒரு மனிதனுக்கு உணவு அவன் கட்டுபாட்டில் இருக்க வேண்டும், உடலை மனதை அதற்கு ஏற்ப பழக்க வேண்டும், இது உனக்கான உணவு அல்ல என்ற கட்டுபாட்டில் மனதை வைக்கவேண்டும், மாறாக உணவுக்கு மனதும் உடலும் கொடுத்தால் அது நம்மை வீழ்த்திவிடும்.
இந்துக்கள் விரதம் என்றும் பட்டினி என்றும் மனதை பக்குவபடுத்திய சூட்சுமம் இதுதான்.நம்புவீர்களோ இல்லையோ, வழிதவறிய எத்தனையோ பேரின் வாக்கு மூலத்தை கேட்டால் அது உணவில்தான் தொடங்கியிருக்கின்றது, சுவையான உணவு என்பது பெண்களின் கண்களை விட மொழியினை விட வலுவான ஆயுதம், எல்லா குற்றங்களுக்கும் மூலம். அவளின் காதலோடு இந்த உணவு மயக்கமும் இருந்திருக்கின்றது, அவனுக்கே அவள் அடிமையுமானாள், அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினாள். அவன் அந்த அளவு அவளை ஆட்டி வைத்திருக்கின்றான் அவளும் ஆடினாள்.அந்த காதலில் அவன் சரியாக இருந்திருக்கின்றான், இவளை விரும்பியவனுக்கு இவள் பிள்ளைகள் அவசியமில்லாது ஆயிற்று, அவனுக்காய் அவளும் அவர்களை வெறுத்தாள்.அவர்களை தன் குழந்தைகளாக அவள் கருதவில்லை கணவனின் சொத்துக்கள் தனக்கு தேவையற்ற சுமை என கருதி தள்ள்விட முயன்றாள்.அந்த அளவு அவளுக்குள் ஆசையும் மோகமும் அவன் கொடுத்த பெருமயக்கமும் இருந்திருக்கின்றது.இந்த குழந்தைகள் இருக்கும் வரை தன்னால் அவனுடன் நிம்மதியாக வாழமுடியாது என நினைத்தவள் அந்த பாதகத்தை செய்துவிட்டாள்.
திருமணம் என்பது கர்மா, இந்த பிள்ளைகள் என்பதும் கர்மா, இந்த கர்மமே எனக்கு முக்கியம் இதற்கு தடையாக யார் வந்தாலும் எதுவந்தாலும் ஏற்கமாட்டேன் என தள்ளிவிட்டிருந்தால் இந்த அவலம் வந்திருக்காது.அந்த பாவியாவது இந்த குடும்பத்தை அழிக்க நினைக்காமல் தவிர்த்திருக்கலாம், ஆசை மயக்கம் வேறு ஒரு குடும்பத்தை நாசமாக்குவது வேறு, அவன் அக்குடும்பத்தை அழித்த படுபாதகத்தை செய்துவிட்டான், அவளுக்கு ஆலோசனை சொல்ல வேண்டியவன் பாதகத்துக்கு தூண்டியிருக்கின்றான்.அப்படி அவள் வேண்டுமென்றால் அவள் குழந்தைகளுடன் ஏற்றிருக்கலாம். அதையும் செய்யாமல் கொல்ல துணிந்தது கொடூரம்.அவளுக்கும் அவள் கர்மா புரியவில்லை., அவனுக்கும் ஒரு குடும்பத்தை அழிக்கும் மகா பாதகம் என்ன என்பது தெரியவில்லை, இருவரின் மயக்கம் அந்த பிள்ளைகளை காவுவாங்கிற்று.
நினைத்து நினைத்து பார்க்கும் விஷயம் அக்குழந்தைகள் நிலை, குழந்தை தாயினைத்தான் நம்பும் அதற்கு தெய்வம் தெரியாது, தந்தை கூட இரண்டாம்பட்சமே
அப்படியான குழந்தைகளை கொல்லும் அளவு அவள் எப்படி மாறிபோனாள் என்பது, தன்னை முழுக்கநம்பும் குழந்தைகளை தான் பெற்ற குழந்தைகளை எப்படி கொன்றாள் என்பது, அதை நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகின்றது.பாதிக்கபட்ட முக்கியமான நபர் அவள் கணவன், ஒழுங்காக வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற படாதபாடுபட்டிருக்கின்றான், அவன் காசில் பிரியாணிவாங்க சென்று இப்படி சிக்கிவிட்டாள் பாதகி.ஒரு ஆண் சரியில்லாவிட்டால் கூட வீடு நிற்கும் ஒரு பெண் தடுமாறினால் குடும்பம் அழியும் என்பது இங்கு சரியாயிற்று.
உணவுக்கு அடிமையாவது என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதும், ஒரு குடும்பத்தை அழிக்க துணிவது எவ்வளவு பாதகம் என்பதும் நினைக்கும் போது இந்துமத தாத்பரியத்தை விட்டு அவள் விலகியதே எல்லாவற்றுக்கும் காரணமாயிற்று என்பது புரியும்.நல்ல இந்துவாக இந்து வாழ்வியல் அறிந்தவளாக அவள் இருந்திருந்தால் இது நடந்திருக்காது, அவள் பெயரோ அபிராமி ஆனால் அதன் அர்த்தம் கூட அவளுக்கு தெரியவில்லை.கருத்தரிப்பு மையத்தில் கோடிபேர் காத்திருக்க, வாடகை தாய்க்கு கோடிபேர் தவமிருக்க அந்த மழலைகள் இவளுக்கு பிறந்து கொல்லபட்டதெல்லாம் வல்விதி.ஏதோ முன் ஜென்ம கர்மா என சொல்லி சென்றாலும் ஒவ்வொரு பெண்ணுக்குமான பாடம் அங்குதான் இருக்கின்றது.
நீதிமன்றத்தை கவனித்தால் அங்கு வரும் ஒவ்வொரு சிக்கலும் வாழ்க்கைகான பாடம், ஒவ்வொருவருக்கான பெரும் பாடம், அப்படி ஒரு பாடம் கற்பிக்கப் பட்டிருக்கின்றது.பெண்களின் மனம் எவ்வளவுக்கு காக்கபட வேண்டும், குலபெண்ணின் மனம் எவ்வளவு பத்திரமாக கவனிக்கபட வேண்டும், அவளால்தான் குடும்பம் என்பதை இந்த பாடம் போதிக்கின்றது.உணவு மோகமும் , மாய சந்தைகளும், பெரும் நுகர்வும், அதிக பணமும், தகவல் தொடர்பு வேகமும் மிகுந்துவிட்ட இவ்வுலகில் இனி எல்லாமே சவால், பெரும் சவால் அங்கு தேவை தவம், அதை செய்வோர் மட்டுமே நிம்மதியாய் வாழமுடியும்.இதைத்தான் என்றோ போதித்த மதம் இந்துமதம்Bollea,RestInPeace,ஹல்க்ஹோகன்,RIPஹல்க்ஹோகன்,WWEவீரர்,மல்யுத்தபுராணநாயகன்,WWEஅரங்கப்புகழ்,ஆழ்ந்தஇரங்கல்கள்.
பிரம்மரிஷியார்


