“உருட்டு உருட்டு” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

“உருட்டு உருட்டு”  திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “உருட்டு உருட்டு“. நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நாயகி ரித்விகா ஸ்ரேயா பேசியது…

எல்லோருக்கும் முதல் நன்றி, இது என் முதல் படம், இயக்குநர் தயாரிப்பாளர் இருவருக்கும் என்னை நம்பி இந்த வாய்ப்பை தந்ததற்காக நன்றி. என்னுடன் படத்தில் நடித்த உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எனக்கு ஆக்டிங் சொல்லித் தந்து, என்னை நன்றாக பார்த்து கொண்டதற்கு நன்றி. நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உழைத்தோமோ, அதே போல் இந்தப்படம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உண்ர்வீர்கள். அனைவருக்கும் நன்றி.

நாயகன் கஜேஷ் நாகேஷ் பேசியது…

இபடத்திற்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் கொஞ்சம் கஷ்டத்தில் தான் ஆரம்பித்தோம், தயாரிப்பாளர் ஜெய் அண்ணா இந்தப்படத்தை நன்றாக செய்வோம் என உழைத்துள்ளார். இசையமைப்பாளர் அருமையான இசையை தந்துள்ளார். தினா மாஸ்டர் அருமையான நடன அமைப்பை அமைத்துள்ளார். இயக்குநர் அழகாக இயக்கியுள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும், இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் பத்மராஜு ஜெய்சங்கர் பேசியது…

எங்களை வாழ்த்த வந்த பெரியவர்கள் அனைவருக்கும் நன்றி. பிரஸ் மீடியா நண்பர்கள் எங்களைப் போன்ற புது தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும். நல்ல படமாக எடுத்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் ஆனந்த்பாபு பேசியது…

என் மகனின் படத்திற்கு வாழ்த்த வந்துள்ள திரையுலக பெரியவர்களான விக்ரமன் , கஸ்தூரி ராஜா , ஆர்வி உதயகுமார் அனைவருக்கும் நன்றி. இவர்களுடைய ஆசிர்வாதம் என் பிள்ளைக்கு கிடைப்பது மகிழ்ச்சி. இது எங்க அப்பா செஞ்ச புண்ணியம், நாகேஷ் ஐயாவுக்கான மரியாதையாக இது அமைந்துள்ளது. உருட்டு உருட்டு படத்தை இயக்குநர் அழகாக செய்துள்ளார். என்னுடைய பையன் நாயகனாக நடித்துள்ளான். நான் நடித்த போது எனக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ, அதே போல் என் பையனுக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசியதாவது….

மீடியா நண்பர்களுக்கு வணக்கம். பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம். இந்த விழாவிற்கு நான் வந்ததுக்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முதல் காரணம் வஜிரவேலு, நம்ம இயக்குனர் பாஸ்கருடைய சித்தப்பா, ஒரு காலத்தில் எனக்கு அவர் கார்டியனா இருந்தவர். இயக்குனர் பாஸ்கர் இப்போது எனக்கு தோளோடு தோள் வந்து பக்கத்துல நிக்கிறாரு. இனி அடுத்து என்னை விட உயரமா நிற்பார். அவரை சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள் அப்புறம் முக்கியமா தமிழ் திரையுலகின் தாரக மந்திரம் என்றைக்கும் அழிக்க முடியாத நிரந்தரமான பெயர் நாகேஷ். அவருக்காக தான் வந்தேன். ஆனந்த் பாபு எனக்கு நெருங்கிய நண்பர், நாகேஷ் சார் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடிச்சிருக்கார். நாகேஷ் சாரை பத்தி பேசாமல் எந்த ஒரு சினிமா மீடியாவும் தப்பிக்க முடியாது. அவ்வளவு சாதனைகள் செய்துள்ளார். நாகேஷை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பாலச்சந்தர் பற்றியும் சொல்ல வேண்டும் இருவரும் செய்த சாதனைகள் அவ்வளவு இருக்கிறது. அவர் பேரனை நான் ஆசிர்வதிக்க வேண்டும் எனது தான் வந்தேன். ஆனந்த பாபுவுடைய சூழ்நிலையை நான் கண் முன்னாடி பார்த்திருக்கிறேன். தனுஷை அறிமுகப்படுத்த தயாரிப்பாளர்களை நான் தேடிப் போகவில்லை. நானே தயாரிப்பாளரா இருந்தேன். நானே இயக்குநராவும் இருந்தேன். ஆனால் ஆனந்த் பாபு தன் பையனுக்காக ஒவ்வொரு அலுவலகத்துக்கும், போனார். என்னுடைய அலுவலகத்துக்கும் வந்திருந்தார். என் பையன்களுடைய அலுவலகத்துக்கும் போயிருக்கார், அந்த தந்தையினுடைய வலிக்கு நீங்கதான் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதுக்காக இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும். உருட்டு உருட்டுன்னு டைட்டிலை கவர்ச்சியாக வைத்துள்ளார்கள். இந்த தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல்லா டெக்னிசியன்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாரும் ஜெயிக்கணும். நன்றி.

இயக்குநர் பாஸ்கர் சதாசிவம் பேசியதாவது

இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது, அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.

நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.