தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி ராஜ்யசபை தேர்தல்!

தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி ராஜ்யசபை தேர்தல்!

மிழகத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, அன்புமணி ராமதாஸ், வில்சன் உள்ளிட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராஜ்யசபை உறுப்பினர்கள் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், தி.மு.க.வின் எம். சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அண்ணா தி.மு.க.வின் என். சந்திரசேகரன், ம.தி.மு.க.வின் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.இந்த நிலையில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகின்ற ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

ஜூன் 9ம் தேதி வேட்புமனுத் தாக்கல்

ஜூன் 9ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12 கடைசி நாள். ஜூன் 19–ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கே தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

அதாவது மாநிலங்களவை பதவிக்கு போட்டி நடைபெறும் பட்சத்தில் பதிவாகும் வாக்குகள் அன்று மாலையே எண்ணி முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதே போல், அசாம் மாநிலத்தில் காலியாகவுள்ள 2 ராஜ்யசபை உறுப்பினர் பதவிகளுக்கும் ஜூன் 19–ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது.

தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கறிஞர் வில்சன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மீண்டும் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணா தி.மு.க. சார்பில் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை இடம் கொடுக்கப்படுமா? அன்புமணி மீண்டும் போட்டியிடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அண்ணா தி.மு.க.விலும் ராஜ்யசபை சீட்டுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

Related Posts