அரசுக் கல்லூரியில் மாரிசெல்வராஜ் பேச அனுமதி கொடுத்தது யார்?
ஒக ஒக நாயகன் உதயநிதி ரசிகர் மன்ற தலைவராகிய அன்பில் மகேசு தம்பிக்கு இதை எல்லாம் கண்டிக்க நேரமில்லையா?
சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோலிவுட் டைரக்டரும் ஜாதி பற்றாளருமான மாரிசெல்வராஜ் பங்கேற்றார்.
மாணவ மாணவியரிடையே உரையாற்றிய அவர், நான் காலேஜ் விட்டு ஓடிப்போன பையன் ஆனால், இப்போது பேராசிரியர்கள் முன்பு பேசுவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பரியேறும் பெருமாளும் கர்ணனும் வேறுவேறு பாதிப்புக்குள்ளானவர்கள். எனவே இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. சினிமா இயக்குனர்கள் கதை செல்ல போகும்போது நிறைய விஷயங்கள் உள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் கதையை 100 தயாரிப்பாளர்களிடம் சொல்லி இருப்பேன். இறுதியாக ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லும்போது ஒரு காட்சியில் அம்பேத்கர் ஆக வேண்டும் என்று சொன்னபோது, அதனை அப்துல்கலாமாக மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டார். நான் அதிர்ச்சியடைந்தேன். ஏன் என்று நான் கேட்டபோது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் என்றார். ஒரு சட்டம் படிக்கும் மாணவர் என்ன சொல்வார் என்று சொன்னதற்கு, அதை உடைத்து கடந்து செல்ல முடியாது. இந்த கதையை விற்கவே முடியாது என அப்படி அடைத்து நிறுத்தக்கூடிய மனிதர்கள் இருந்த காலம் என பேசினார். அப்பொழுது ரஞ்சித் வந்து ஆரம்பிக்கப்பட்டது,பரியேறும்பெருமாள் தோல்வியடைந்திருந்தால் இன்னொருவர் அதுபோன்ற கதையை யோசிக்கவே மாட்டார். அப்படத்தின் வெற்றி அதனைத்தொடர்ந்து வலிகள் நிறைந்த கதைகளை படமாக்கியது தற்போது பல இயக்குநர்களுக்கு சிக்கலாகிவிட்டது.

என்னோடு என்னைவிட வலிமிகுந்த மனிதர்கள் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் கலைத்துறையை தேர்ந்தெடுத்தேன். என் அப்பா மூட நம்பிக்கையாளர், பேய் ஓட்டுபவர், என் அப்பா ஒரு சமுக அடையாளமாக இல்லை என வருத்தம் இருந்தது.என் அப்பா என்னை எங்கும் அழைத்துச் சென்றதில்லை. ஆனால் நீ போ என என்னை அனுப்பி வைத்தார். பிள்ளைகளை ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கை இருக்கிறதோ? இல்லையோ? கடவுளை பிடித்துக் கொண்டார் என்பதை தற்போது நான் புரிந்து கொண்டேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்றால் அதை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற நிலை இப்போதும் இருக்கிறது.சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, காமெடி படங்களை எடுக்க படிக்கத் தேவையில்லை, யோசிக்கத் தேவையில்லை. நான் இயக்கிய படத்தை பார்த்துவிட்டேன் என என் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் சொல்வதுதான் வெற்றி. மறைமுகமாக எனக்காக ஒலிக்கின்ற குரல்களே எனது பெருமை என நினைக்கிறேன்.
நீங்கள் படம் எடுத்தால் ஓடிவிடும் உங்கள் மக்களே பார்த்து ஓட வைத்து விடுவார்கள். இதற்கு முன்பாக இந்த மக்கள் படம் பார்க்கவில்லையா? உங்கள் படங்களை பார்க்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இதிலும் எனது திறமையை ஒரு வட்டத்திற்குள் கொண்டு செல்ல பார்க்கிறார்கள்.தலித் குரல், பொது சமூக குரல் என்று எதுவுமில்லை அனைத்தும் மானுட குரல்தான். பொது சமூகத்தின் குரலாக என் படைப்புகளை மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை” அப்படீன்னு பேசி விட்டு போயிருப்பதுதான் இப்போது சர்ச்சையாகி வருது.
அரசு கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏன் இந்த மாரி செல்வராஜ்?
முன்னாள் நீதிபதி சந்துரு அளித்த அறிக்கையை முழுமையாக படித்தீர்களா? இல்லையா?
ஜஸ்ட் நான்கு படங்கள் – அதிலும் டீச்சரை லவ்வுவது, ஜாதீ சர்ச்சையுள்ள சினிமாக்களை எடுத்த, காலேஜ் முடிக்காத ஒருவரை அரசு கல்லூரியில் அழைக்க மேலிடத்தில் அனுமதி வாங்கினாய்ங்களா?
மாரி செல்வராசு பேசியதன் உள் அர்த்தமும், படிப்பு அவசியமில்லை என்ற தொனியும் ஏகப்பட்ட இளம் மாணவர்கள் மனசில் பதிந்து பாதை மாறி விடும் வாய்ப்பு இருப்பதை உணர்கிறீர்களா? இல்லையா?
துமுவாகிய சின்னவருக்கு பிரியமானவர் என்பதால் கண்டுக் கொள்ளவில்லையா?
கொஞ்சம் விசாரிங்க மினிஸ்டரே!
இப்படிக்கு
நிலவளம் ரெங்கராஜன்


