ஸ்மார்ட்போன் உதவியால் மருந்துகளை வீட்டிற்கு வரவழைத்துக்கொள்ள முடியும்.!
மொபைல் போனால் ஒரே தலைவலி எனப்பலர் அலுத்துக் கொள்வதை இப்பொதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது.அதே சமயம் தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்ட ‘104’ என்னும் மருத்துவ சேவைத் திட்டத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெறும் இந்த உடனடி ‘104’ மருத்துவ ஆலோசனைத் திட்டத்தின் தலைமையகம் சென்னை கஸ்துாரிபாய் மருத்துவமனையில் உள்ளது. அங்கு இந்த ‘104’ என்ற எண்ணுக்கு, 10 இணைப்புகள் உள்ளன.இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால், முதலுதவி, பல்வேறு மருத்துவ ஆலோசனைகள், மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்படும். அருகே உள்ள மருத்துவமனை விவரம் தரும் திட்டத்ட்ர்ஹிற்கு7 ஏக வரவேற்புள்ள நிலையில் தற்போது ஒரு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மேலும் ஒரு டெக்னால்ஜியை அளித்துவருகிறது. அதாவது பிராங்க் ரோஸ் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் உதவியால் தேவையான மருந்துகளை வீட்டிற்கே வரவழைத்துக்கொள்ள முடியும். நோயாளிகள் மருந்தைத் தேடி வெளியில் அலையத் தேவையில்லை. தற்போதைக்கு கொல்கத்தா நகரில் நோயாளிகளுக்கு இந்த அப்ளிகேஷன் உதவிவருகிறது.

இமாமி குழுமத்தைச் சேர்ந்த இமாமி பிராங்க் ரோஸ் லிமிடெட் என்னும் நிறுவனம் இந்த அப்ளிகேஷனை உருவாக்கி யுள்ளது. பிராங்க் ரோஸ் (Frank Ross) என்பது 108 ஆண்டுப் பழமை கொண்ட மருத்துவ நிறுவனம். இதற்கு மேற்கு வங்காளம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 99 தனி மருந்துக்கடைகள் உள்ளன.
பிராங்க் ரோஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் உதவியால் இருபத்து நான்கு மணி நேரமும் தேவையான மருந்துகளை ஆர்டர் செய்து கொள்ள முடிகிறது. கொல்கத்தா நகரத்தின் எந்த மூலையிலிருந்து மருந்துகளை ஆர்டர் செய்தாலும் ஆர்டர் செய்த நான்கு மணி நேரத்திற்குள் மருந்துகள் வீட்டைத் தேடி வந்துவிடுகின்றன. ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பம் கொண்ட எந்த மொபைல் போனிலும் இந்த அப்ளிகேஷனைப் பதிவிறக்கிக்கொள்ள முடியும்.


