அத்வானி காலில் விழுந்து ஆசி வாங்கிய மோடி!

அத்வானி காலில் விழுந்து ஆசி வாங்கிய மோடி!

கடந்த ஆண்டு, நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளராக பாஜக தலைமை தேர்வு செய்தபோது அந்த முடிவை ஒப்புக் கொள்ளாத அத்வானியை மேலிடத் தலைவர்கள் அடுத்தடுத்து பேசி அத்வானியை சமாதானப்படுத்தினர். இருந்தாலும் மோடி தலைமையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் மீது அத்வானி ஆர்வம் காட்டவில்லை. இந் நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக அணி அமோக வெற்றி பெற்ற பிறகு அத்வானியும், நரேந்திர மோடியும் ஒரே மேடையில் தோன்றினர். அப்போது தனது காலில் விழுந்த மோடியை கட்டித் தழுவி மகிழ்ச்சியை அத்வானி வெளிப்படுத்தியது அங்கிருந்த பாஜக தலைவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
modi-seeks-blessings-of-l-k-advani
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்ததற்கு முக்கிய சூத்ரதாரியான அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளரும் குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி, இந்த அமோக வெற்றிக்குப் பின் முதன்முறையாக சனிக்கிழமை தில்லி வந்தார்.ட்சியின் தலைமையகம் வந்த மோடியை பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்தும் தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர், தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மோடி பங்கேற்றார். பின்னர், தாம் போட்டியிட்ட வாராணசி தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகப் புறப்படத் தயாரானார். அப்போது தலைமையக வளாகத்தில் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். “இந்தியாவின் இரும்புத் தூண் மோடி’, “நிரந்தர பிரதமர் மோடி’ என சிலர் கோஷமிட்டனர்.

அப்போது தொண்டர்கள் முன்னிலையில் பேசிய மோடி “மக்களவைத் தேர்தலில் பாஜக அடைந்த வெற்றிக்கு லட்சக்கணக்கான தொண்டர்களின் கடின உழைப்பும் வியர்வைத் துளிகளும் காரணம். உங்களால்தான் மத்தியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாஜகவின் தாமரைச் சின்னம் மலர்ந்துள்ளது. இதன் மூலம் கட்சிக்கும் மக்களுக்கும் பாஜக மீது புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதை தக்க வைக்க தொடர்ந்து நாம் மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தி அவர்களின் நலனுக்காகப் பாடுபட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

Related Posts