ஸ்டாலின் ராஜினாமா + வாபஸ்! பக்கா டிராமாவென அழகிரி மகன் கமெண்ட்!

ஸ்டாலின் ராஜினாமா + வாபஸ்! பக்கா டிராமாவென அழகிரி மகன் கமெண்ட்!

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கருணாநிதியிடம் ஸ்டாலின் பொருளாளர் உள்ளிட்ட கட்சி பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்து கடிதம் அளித்திருந்ததாகவும் ஆனால் ஸ்டாலின் ராஜினாமா முடிவை ஏற்க திமுக தலைவர் கருணாநிதி மறுத்ததையடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதவி விலகும் முடிவை திரும்பப் பெற்றார். முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ தலைவர் கருணாநிதி மு.க.ஸ்டாலினின் ராஜினாமா கடிதத்தை ஏற்பது வரை இதை செய்தியாக்க வேண்டாம். அனைத்து திமுக மாவட்ட செயலர்களும் சென்று கருணாநிதியிடம் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்கக் கூடாது என்றும் வலியுறுத்துவார்கள். அதன்பின், நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது. திமுகவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான நாடகம்?” என்றெல்லாம் தெரிவித்த நிலையில் அவர் சொன்னது போலவே நடந்தது குறிப்பிடத்தக்கது.
karunanidhi_stalin_
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தி.மு.க.வின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்தார். பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியை அடுத்து ஸ்டாலின் இந்த முடிவை எடுத்து ராஜினாமா குறித்து கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு ஸ்டாலின் கடிதம் அளித்திருந்தார்.இதற்கிடையே ஸ்டாலின் ராஜினாமாவிற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். ஸ்டாலின் சேவை திமுக-வுக்கு தேவை என கருணாநிதி கூறியதாக துரைமுருகன் பேட்டி அளித்ததை யடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதவி விலகும் முடிவை திரும்பப் பெற்றார். இதனிடையே தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது கூறிய அவர், தேவையற்ற செய்திகளை நான் பார்ப்பதும் இல்லை; கேட்பதும் இல்லை; அவர் ராஜினாமா கடிதம் அளிக்க உள்ள தகவலே நீங்கள் சொல்லித் தான் தெரியும்; இது எல்லாமே வெறும் டிராமா; அவர் ராஜினாமா கடிதம் கொடுப்பது போல் கொடுப்பார்; சிலர் வேண்டாம் என்று தடுப்பார்கள்; உடனே திமுக தலைவரும ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறுவார்; இது எல்லாம் டிராமா தான்; இந்த நாடகம் எவ்வளவு நாள் தான் போகும் என்று பொறுத்திருந்து பாருங்கள். என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த ராஜினாமா நாடகம் எனவும், வெறும் கண்துடைப்பு என்று அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரியும் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளது போலவே நடந்தது!
alakiri tweet
பின்னர் இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலின் ராஜினாமா செய்தார் என்று வெளியான தகவல் பொய்யானது. கடிதம் கொடுக்க வந்த போது எனது அறிவுரையை ஏற்று ஸ்டாலின் ராஜினாமா முடிவை திரும்ப பெற்று கொண்டார். சமீபத்திய தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு ஊடகங்களே காரணம். தோல்வி குறித்து கட்சி கூட்டத்தில் ஆலோசிப்போம்.”என்றதுடன்நான் அழகிரி பற்றி பேச விரும்பவில்லை. அழகிரி என்ற ஒரு பிள்ளை இருப்பதாகவே நான் கருதவில்லை. அழகிரியை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது எனவும் கோபமாக சொன்னார்.

Related Posts