பாராளு மன்ற உறுப்பினர்களின் புது டைமென்ஸன்.!
GREEN – பச்சை – 543 உறுப்பினர்களை கொண்ட லோக்சபா தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த உடன் பலருக்கு பெருமூச்சு – அப்பாடா நிலையான ஒரு அரசாங்கத்தை காண்போம் என்று. அது என்ன? மெஜாரிட்டிக்கு தேவையான 272 பிளஸ் பி ஜேபி தனியாகவே பெற்று விட்டதால் இந்த கூட்டணி தர்ம குன்டாந்தடி எம் பிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அடுத்து பிஜேபியுடன் ஒட்டி கொண்ட அலையன்ஸ் என்ற ஒரு கும்பலும் 272 பிளஸ்க்கு மேலே ஒட்டி கொண்டிருப்பதால் வழக்கம் போல கேட்டுக்கு வெளியே இருந்து ஆதரவு – நிபந்தனை இல்லாத ஆதரவு – தொங்கு பாராளுமன்றத்தை தவிர்க்க ஆதரவு என்று எந்த வகை சீனும் போட முடியாத அளவுக்கு ஒரு நிலைத்தன்மை. இதன் மூலம் எம்பி அல்லது மத்திய மந்திரி நம்ம கூட்டணி இருந்தாதானேன்னு தைரியத்துடன் ஊழல் செய்யவே முடியாது. இந்த நிலைத்தன்மை தான் ஒரு சிறந்த அரசாங்கத்துக்கு முதல் படி. எந்த ஒரு அஜென்டாவையும் தனியாக துக்கி நிறுத்து பெரும்பான்மையுடன் அப்ரூவ் செய்து சட்டமாக்கபடும்.

இதற்கிடையில் எதிர்கட்சிக்கு தேவையான மினிமம் 54 காங்கிரஸ்க்கு இல்லை என்பதால் அவர்களின் சோலோ எதிர்கட்சி அந்தஸ்தும் கிடைக்காமல் ஒரு இன்டிபென்டன்ட் எம்பி கேன்டிடேட்டுக்கு கிடைக்கும் அதிகாரம் / நேரம் தான் கிடைக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. இதன் மூலம் பாராளுமன்ற லைவ் டெலிகாஸ்ட்டை இழுத்து மூட வேண்டாம் – ஆப் பைட் ஜாயியேன்னு வாய் கிழிய கத்த வேண்டாம் – ஒரு நாளைக்கு ஒன்பது தடவை அவை ஒத்தி வைக்க கூட தேவையில்லை என்பது மனதுக்கு நிறைவான செயலாக இருப்பினும் சில முட்டுக்கட்டைகள் இந்த ஆம்பர் பகுதியில் பார்ப்போம்.
YELLOW – ஆம்பர் – பாரதிய ஜனதா கட்சியின் பலம் பலவீனம் – ஆர் எஸ் எஸ். இது ஒரு ரத்த நாளம் போல் பிண்ணி பினைந்து செயல்பட்டு வரும் ஒரு அங்கம். இவர்களின் பல அவதாரங்கள் பிஜேபிக்குள் இன்னும் ஓங்கி எம்பிகளாய் நிற்கின்றன. இவர்களுக்கு கடிவாளம் போட அதிக சக்தி தேவை. தொகாடியா என்ற ஒற்றை ஆட்கள் இந்த 300 பிளஸ் வாங்கிய கட்சியை ஒரே பிரச்சினையில் கவுக்க கூட சக்தி உள்ள பயங்கர ஆட்கள் என்றால் அதிகமில்லை. அடுத்து மடியில் கட்டி கொண்ட ஒரு பூனையாக அத்வானி – இவருக்கு ஒதுக்கபடும் அமைச்சர் போர்ட் ஃபோலியோவை பொறுத்து இவரின் கருத்துக்கள் பிஜேபியை நோக்கி இருக்கும். நிதின் கட்கரி இன்னும் பல சொத்து பிரச்சினை உள்ள பிஜேபியின் எம்பிக்கள் அமைச்சர் ஆனால் இதன் மூலம் மோடிக்கு பெரிய சவால் தன் கூடாரத்தின் உள்ளேயே இருக்க அதிக வாய்ப்புண்டு.
இவர்களின் முதல் பெர்ஃபார்மென்ஸ் ஆன அமைச்சர் போர்ட்ஃபோலியோவில் 120 கோடி மக்களை சந்தித்த சவாலை விட இந்த 300 பிளஸ் எம்பிக்களிடம் சமாளிக்க வேண்டியது மிக அதிகம். பத்து வருடம் ஊழலில் ஊழலுக்கு ஒத்து போயிருந்த அத்தனை அரசு அதிகாரிகளும் சுமார் மூஞ்சி குமார் கணக்காய் தான் முதலில் வேலை செய்வார்கள். இவர்கள் இந்த புது அரசுக்கு இன்னும் ஒரு புது முட்டுகட்டைகள்.
குஜராத் மாதிரி ஓவர் நைட் ஓவர்ஹால் என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் ஆனாலும் இவர்களை கையாளுவதிலே பெரிய சாலஞ் பிஜேபிக்கு உண்டு அது மோடி என்னும் ஒரு மனிதரின் தனிபட்ட சவாலாக இல்லாமல் சரியான காம்ரேட்கள் வாஜ்பாய்க்கு அமைந்தது போல அமைந்தால் பிஜேபியின் வசந்த காலம் 1-3 வருடத்தில் தென்றலாய் அல்லது அனலாய் மக்களுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.!
RED – சிவப்பு – லோக்சபா ஒகே – வழக்கம் போல இந்திய அரசமைப்பின் இன்னொரு அசைக்க முடியாத தூணாக விளங்கும் ராஜ்யசபா என்னும் தோத்தோங்கோலிகளுக்கு ஷார்ட்கட்டாய் அமையும் ராஜ்யசபா எம்பிக்களின் வரிசையில் பிஜேபி ஒரு மைனாரிட்டி எதிர்கட்சி தான் இன்னமும். இதன் மூலமாய் அரசு செய்ய வேன்டிய மாற்றத்துக்கு பெரிய அப்போசீஷன் உண்டு என்பதை மறக்க வேண்டும். காங்கிரஸ் உட்பட கறை படிந்த அத்தனை எம்பிக்களின் கையும் இங்கு ஓங்கியே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த பிரச்சினை சரி செய்ய என்னைக்கேட்டால் இன்னும் 2-3 வருடம் தேவை என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. இந்த ராஜ்யசபா ரூட்டில் காங்கிரஸ் தன் பங்குக்கு ரத்த வெறி கொண்ட ஆட்களை நிலை நிறுத்தி அவையை அமளி துமளிக்கு கொண்டு செல்லும். மோடி என்ற தனி மனித வழிபாடு இந்த சபாவில் செல்ஃப் எடுக்காமல் போக இந்த மாதிரி ஒரு காண்சிடியூஷன் இருப்பது பிஜேபிக்கு ஒரு பெரும் பின்னடைவு. வெற்றிக்கு பின் டெல்லியை அடுத்து வாரானாஸிக்கு சென்றது பிரச்சினை இல்லை என பிஜேபி நினைத்தாலும் நெற்றியில் பட்டையுடன் அந்த புனித ஸ்தலத்தில் காட்சி தந்தது சிலரின் அடி வயிற்றில் புளியை கரைக்க துவங்கியதில் பிஜேபிக்கு ஒரு சங்கடம் வேறு வகையில் நிலை நிறுத்தப்படலாம். எனினும் இந்தியாவின் சுதந்திரத்திக்கு பிறகு பிறந்த ஒரு ஆள் இந்தியாவின் முதல் பிரதமராய் வருவதால் ஒரளவு இள ரத்தம் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது


