தமிழ் குரல் / AI Voice
“பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதால் அதிருப்திஅடைந்ததாக கூறப்பட்ட பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, சட்டீஸ்கர் பொதுக் கூட்டத்தில் மோடியின் நிர்வாகத் திறமை பற்றி பாராட்டு மழை பொழிந்து பலரின் வாயை அடித்துள்ளார்.’தங்கள் கட்சி பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ள நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில்தான் குஜராத் முன்னேற்றம் கண்டதாகவும் எனவே அவர் இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் அத்வானி புகழ்ந்துள்ளார். இதையடுத்து அத்வானி பேச்சு குறித்து பீகார் மாநில முதல் அமைச்சர் நிதீஷ்குமார் ‘அத்வானி ஒரு காலத்தில் பா.ஜனதாவின் இரும்பு மனிதாராக இருந்தார். ஆனால் இன்று அவர் இரும்புத் துருவாக ஒதுக்கப்பட்டார்” என்று குறிப்பிட்டுளளார்.

பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டார். இதனால், மூத்த தலைவர் அத்வானி அதிருப்தியடைந்ததாகவும் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியும் அவர் சமாதானம் ஆகவில்லை என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் ராம்ஜெத்மலானியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அத்வானியும் மோடியும் கலந்து கொண்டனர். அப்போது, அத்வானியின் காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார். கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை அத்வானி ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்துவதுபோல, சட்டீஸ்கரில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடியை அத்வானி புகழ்ந்து பேசினார்.
கோர்பா என்ற இடத்தில் 500 மெகாவாட் மின்நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தபின், நடந்த பொதுக் கூட்டத்தில் அத்வானி பேசம் போது,”குஜராத் மாநிலத்தில் எல்லா கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. மின்வசதி இல்லாத கிராமமே இல்லை என்ற சிறப்பை நாட்டிலேயே முதலாவதாக குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. இதற்கான பெருமை முழுவதும் நரேந்திர மோடியையே சேரும். மின்சாரம் மட்டுமின்றி அடிப்படை வசதிகளிலும் குஜராத் மாநிலம் முன்னேறியுள்ளது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கும் இதை பின்பற்றி செயல்படுகின்றனர். இந்த திட்டங்களை முதலில் செயல்படுத்தியவர் எனது சகாவான நரேந்திர மோடிதான்.
குஜராத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக செயல்பட்ட நரேந்திர மோடியை 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக பா.ஜ. அறிவித்துள்ளது. அவரிடம் மிகப் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பா.ஜ. அரசுகள் செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்”என்று அத்வானி பேசினார்.
இந்நிலையில் அத்வானி பேச்சு குறித்து பீகார் மாநில முதல் அமைச்சர் நிதீஷ்குமார் கூறுகையில், ”அத்வானி ஒரு காலத்தில் பா.ஜனதாவின் இரும்பு மனிதாராக இருந்தார். ஆனால் இன்று அவர் இரும்புத் துருவாக ஒதுக்கப்பட்டார்” என்றார்.
Advani gives in, endorses Modi’s candidacy
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
Signalling a truce, veteran BJP leader L.K. Advani on Monday endorsed Gujarat Chief Minister Narendra Modi as the BJP’s prime ministerial candidate.Speaking at a public rally in Raipur, Mr. Advani hailed the Gujarat government’s feat of bringing 24-hour power supply to all villages in the State. If the faith reposed in Mr. Modi “fructifies,” the senior BJP leader said, good governance provided by BJP governments could be replicated across the country..
