32°C
விளம்பரம்
Advertisement

ஃபேஸ்புக் மூலம் அருகிலுள்ள நண்பர்களை தெரிந்து கொள்ளலாம்!

admin சேலம் Published: April 20, 2014 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, அல்லது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை கிட்டத்தட்ட பலர் நிமிடத்துக்கு ஒரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் உல்கம் தழுவிய சமூக வலையமைப்புத்தளங்கள்தான்.அதில் இந்த ஃபேஸ்புக்கின் பங்குதான் டாப்.ஒவ்வொருவரும் காலையில் பார்த்த விஷயங்கள், மனதில் உதித்த எண்ணங்கள், விரும்பிய புகைப்படங்கள், வடித்த கவிதைகள், பார்த்த காணொளிகள், வாசித்த கட்டுரைகள் என்று பகிரப்படும் விஷ்யங்களுக்கு அளவே கிடையாது.இதற்கிடையில் அவரை நெருங்கி ‘நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? என்று கேட்டால் பெரும்பாலானோர் உண்மையை சொல்வதில்லை. இந்நிலையில் நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் இருக்கும் நண்பர்களை இனி இந்த பேஸ்புக் மூலம் ஈசியாக அறிந்து கொள்ளலாம். இதற்காகவே பேஸ்புக் புதிய Mobile Application ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது.
Facebook_Announces_Location-Sharing_Feature__Nearby_Friends_
ஹைடெக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிகேசனை பயன்படுத்தும் போது அருகில் நண்பர்கள் இருந்தால் அவ்ர் குறித்த தகவல் தரப்படும்.அத்துடன் இந்த அப்பிளிகேசனை பயன்படுத்துபவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களை மட்டும் செல்க்ட் செய்து பயன்படுத்தும் வசதியும் உண்டு.உதாரணமாக, கோவையில் இருக்கும் நண்பனுக்கு போன் செய்தால், கொழும்பில் இருக்கிறேன் மச்சி என்று (பொய்) சொல்லி ஏமாற்ற முடியாது.நம் இருப்பிடத்தை பக்காவாக காட்டிக் கொடுத்துவிடும் பேஸ்புக்..

இதன்மூலம் நம் நெருங்கிய நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என்று தனக்கென தனி வட்டம் அமைத்தும் பயன்படுத்தலாம். அத்துடன் இவ்வட்டாரத்தில் உங்களை இணைக்க முடியாமல் செய்து சொள்ளும் வசதியும் உள்ளதாம். இது geolocation என்ற தொழிநுட்பம் மூலம் சாத்தியமாகிறது.

Nearby Friends tells you the location of friends within a half-mile radius of where they are. If you want more info, you can share precise location data with individual friends.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்