32°C
விளம்பரம்
Advertisement

“ரங்கோலி” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள் !!

admin சேலம் Published: August 20, 2023 5 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

எடிட்டர் சத்ய நாராயணன் பேசியது…

பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. முதலில் விஜய் சாருக்கு நன்றி. முதலில் திரைக்கு வந்து அவருடன் தான் வேலை பார்த்தேன். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. வாலி மோகன் தாஸ் என் நண்பர், அவர் தந்த வாய்ப்புக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ரசித்து ஆதரவு தாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் ஆனந்த் மணி பேசியது…

இது என் 15 வது படம். வாலி மோகன் தாஸ் என் ஃபிரண்ட், இந்த சூழ்நிலை வாய்ப்பிற்காக அவருக்கு நன்றி. எங்கள் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த மேடைக்காக ஏங்கியிருக்கிறோம். இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தி பேசியது,

எங்கள் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் வாலிக்கும் நன்றி. இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டதும் அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு உந்துதலாக இருந்தது. படம் ஒரு மன நிறைவை அளிக்கும். இப்படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாகக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இயக்குநரின் உதவியாளர்கள் அனைவரும் கடின உழைப்பை தந்துள்ளார்கள். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் வேல்முருகன் பேசியது,

இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் வாலி அவர்களுக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும். விளையாட்டாக இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்தை இந்த படம் கூறும். எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் மேத்தா பேசியது,

இந்த மேடையைப் பாடலாசிரியர் வேல்முருகன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் அறிமுகமாகும் அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாகக் கதாநாயகன் ஹமரேஷ் அவருக்கு வாழ்த்துக்கள். பாடல்கள் அனைத்தும் அற்புதமாக வந்துள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் சாய் ஶ்ரீ பேசியது…

எனக்கு இது முதல் படம். திரையுலகத்தில் அறிமுகம் இல்லாத எங்களுக்கு, இப்படி ஒரு வாய்ப்பு அளித்ததற்கு எங்கள் தயாரிப்பாளர்களுகும் இயக்குநர் வாலி சாருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் எங்களை அழகாகக் காட்டியுள்ளார், காட்சியை அழகாக வடிவமைத்துள்ளார். சினிமா என்பது பலரது உழைப்பில் உருவாவது, இப்படத்திற்காக தங்கள் உழைப்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. முருகதாஸ் சார் உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குத் தமிழ் தெரியாது, ஆனால் எனக்குப் பொறுமையாகச் சொல்லித்தந்து கதாபாத்திரத்தை எனக்குள் கொண்டு வந்த இயக்குநர் வாலி சாருக்கு நன்றி. ஹமரேஷ் தனது வேலையைத் திறம்பட செய்துள்ளார். ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது நன்றி.

நடிகை அக்ஷயா பேசியது,

நான் முதலில் வேறு ஒரு படத்திற்காகத்தான் ஆடிசன் செய்திருந்தேன். ஆனால் இப்பட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ஹமரேஷ் சிறப்பாக நடித்துள்ளார், அதிக உழைப்பைத் தந்துள்ளார். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்ததற்கு இயக்குநர் வாலி சாருக்கு நன்றி.

ஆடுகளம் முருகதாஸ் பேசியது…

இந்த ரங்கோலியில் வாய்ப்பு கிடைத்ததே மிக சந்தோஷம். ஹமரேஷ் இவ்வளவு படம் பண்ணியிருக்கிறான் என்பதே இப்போது தான் தெரிகிறது. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சின்ன தனுஷ் அவர். அவருக்கு வாழ்த்துக்கள். படம் நன்றாக வந்துள்ளது

நடிகர் அமித் பார்கவ் பேசியது…

இதுவரை நல்ல மருமகன், போலீஸ் இப்படித் தான் கேரக்டர் செய்துள்ளேன், தமிழ் வாத்தியாராக இப்போது தான் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை தந்த வாலி மோகன் தாஸுக்கு நன்றி. ஹமரேஷ் செட்டில் ரொம்ப சின்சியராக மிக அமைதியாக இருப்பார். கண்டிப்பாகப் பெரிய இடத்திற்குச் செல்வார். இயக்குநர் வாலி கடினமான உழைப்பாளி. அவர் வைக்கும் ஃபிரேமே அவ்வளவு அழகாக இருக்கும். அந்த உலகத்திற்குள் போகும் ஆசையைத் தருவார். படம் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

கதை நாயகி பிரார்த்தனா பேசியது…

எனக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. வாலி சார் என் குரு மாதிரி அவர் தான் எல்லாம் சொல்லித்தந்தார். ஹமரேஷ் நிறைய உதவியாக இருந்தார். இந்தப்படத்தை எல்லோரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் நன்றி.

எழுத்தாளர் அஜயன் பாலா பேசியது..

கேலக்ஸி என்றால் நட்சத்திர கூட்டம் என அர்த்தம். தமிழ் சினிமாவில் சிவகுமார் ஃபேமிலி, எடிட்டர் மோகன் ஃபேமிலி என கேலக்ஸி இருக்கிறது. அது போல் அழகப்பன் விஜய் ஃபேமிலி ஒரு கேலக்ஸி, அவர்களோடு நானும் இணைந்து இருக்கிறேன். இந்தப்படம் எனக்கு முக்கியமான படம். இந்தப்படம் இன்றைய மிக முக்கியமான பிரச்சனையை பேசுகிறது. கல்வியில் இருக்கும் பெரிய பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசுகிறது. ஹமரேஷ் மிக நன்றாக நடித்திருக்கிறார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியது..

வருகை புரிந்த மூத்த இயக்குநர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. ன்னை நம்பி வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என்னுடன் இணைந்து உழைத்த உதவியாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இசையமைப்பாளருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். எல்லோரும் தங்கள் படம் போல் நினைத்து உழைத்தார்கள். ஹமரேஷை வஸந்த் சார் படத்திலிருந்து பார்த்து வருகிறேன் மிக அற்புதமான கலைஞன். எதையும் புரிந்து கொள்ளும் தன்மை அவருக்கு அதிகம். முருகதாஸ் அண்ணனிடம் கதை சொன்ன போது அவருக்கு ஆச்சரியம், நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்றார். எப்போது டேட் கேட்டாலும் ஓடி வந்துவிடுவார். மேலும் என்னை நம்பிய இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. உங்களுக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஹமரேஷ் பேசியது..

உங்கள் ஆதரவு எங்கள் எல்லோருக்கும் வேண்டும், இது ஒரு சர்ரியலான மொமண்ட். இந்த மேடையை நினைத்துப் பார்த்ததில்லை. படத்தில் எல்லோரும் எனக்குப் பெரிய ஆதரவாக இருந்தார்கள். நண்பர்களாக நடித்த அனைவரும் உதவியாக இருந்தார்கள். ஆடுகளம் முருகதாஸ் உடன் நடிக்க வேண்டுமே என முதலில் பயமாக இருந்தது ஆனால் அவர் நிறையச் சொல்லித்தந்தார். வாலி அண்ணா அவருக்குப் படம் தான் முக்கியம், கட் சொல்லும் வரை எதையும் கண்டுகொள்ள மாட்டார். படம் நன்றாக வர மிகக் கடினமாக உழைத்துள்ளார். பிரார்த்தனாவிற்கு நன்றி. வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உதய் மாமா, விஜய் மாமா, அய்யா மூவரும் தான் நான் நடிக்கக் காரணம் அனைவருக்கும் நன்றி.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளனர்.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்